.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Saturday, October 20, 2012

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?




டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோயின் போக்கு தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் உண்டாகும். காபி கொட்டை நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம்.
டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்கிறோம். சில சமயம் நோயாளிக்கு டெங்கு ஷாக் வரலாம்.
நான் எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்?

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்!


காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!  (அல்குர்ஆன் 89: 1, 2)

இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...

(துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதி: 688

Monday, October 15, 2012

குர்பானியின் சட்டங்கள்


குர்பானியின் நோக்கம் 
இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனுக்காக தன்னுடைய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுவதற்கு முன்வந்தார்கள். அல்லாஹ் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை ஏற்றுக்கொண்டு இஸ்மாயில் (அலை) அவர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக ஒரு பிராணியை அறுத்துப் பலியிடுமாறு கட்டளையிட்டான். (பார்க்க அல்குர்ஆன் 37 : 100  111) இப்ராஹிம் (அலை) அவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு குர்பானி என்ற வணக்கம் நிறைவேற்றப்படுகிறது.
அனைவரும்இறைவனை அஞ்சிவாழ்பவர்களாக மாறவேண்டும் என்பதுதான் இந்தக் குர்பானி வணக்கத்தின் முக்கியமான நோக்கமாகும்.
அவற்றின் மாமிசங்களோஅவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!           அல்குர்ஆன்(22 : 37)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அழியாமல் இருக்குமா?

நபிமார்களின் உடல்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் தெளிவான நம்பிக்கையாகும்.
அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத் தூதர்களின் உடல்களை புவி அழிப்பதை விட்டும் அல்லாஹ் அவர்களின் உடல்களைப் பாதுகாக்கிறான்.
உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போதுஅல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள்நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி), நூற்கள்: நஸயீ 1387, அபூதாவூத் 883, இப்னுமாஜா 1626, அஹ்மத் 15575

சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித் தொகை : கலெக்டர் அறிக்கை


சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திட, விண்ணப்பம் செலுத்திட இன்று கடைசிநாள் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திர சேனன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பாரசீகர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல், சட்டம், கால்நடை மருத்துவம், மேலாண்மை கல்வி போன்ற தொழில்நுட்ப கல்வி பயில வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது,
இதைப் பெற இணையம் மூலம் விண்ணப்பிக்க 15-10-2012 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுவரை தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத சிறுபான்மை மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும்,   www.momascholarship.gov.in   என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மதிப்பெண், ஜாதி, வருமானம், இருப்பிடம் ஆகிய சான்றிதழ்கள், கல்வி கட்டண ரசீது, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சேர்த்து சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சி



Saudi mother pardons killer of only son
சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும்  நிகழ்ச்சியில் கடந்த  இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார்.
இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டார். இது பற்றி கூறப்படுவதாவது:

மர்ஸூகா அல் பிலேவி என்பது அந்தத் தாயின் பெயர். விதவையான அவருக்கு இறந்துபட்ட மகனும், மூன்று மகள்களும் (அவர்களில் ஒருவர் முழுமையாக வாத நோயால் தாக்கப்பட்டுச் செயலற்றவர்), வாதநோயால் பாதிக்கப்பட்ட வயதான தந்தையும் உண்டு.  வாழ்வாதாரமாக, மறைந்த கணவர் பெயரில் மாதந்தோறும் அரசு அளிக்கும் ஓய்வூதியம் சுமார் 2000 ரியால்களும் சவூதி சமூகக் காப்பீட்டு நிறுவனம் மாதந்தோறும் அளிக்கும்  1000 சவூதி ரியால்களுமாக இவையே  வாழ்வை நகர்த்த உதவும் பொருளாதார ஊன்றுகோல்கள் அவருக்கு. சொந்தத்தில் வீடின்றி இளவரசர் சுல்தான் ஆதரவகம் ஒன்றில் தான் தங்கியுள்ளனர்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மாலை நேரத்தில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக தன் மகனுக்காகக் காத்திருந்தார் மர்ஸூகா. ஆனால், மகன் வராமல், மகன் கொல்லப்பட்ட செய்தியே அவரை அடைந்தது.  ஒரே மகனை இழந்துவிட்ட இத்துயரையும் 'இறைவனின் நாட்டம்' என்று எளிதாகவே எடுத்துக்கொண்டார் அந்தத் தாய்.

நடத்தை சரியில்லாத தாய்க்கு உபகாரம் செய்ய வேண்டுமா?

கேள்வி: எனது நண்பர் ஒருவர் தனது தாயாருடன் பல வருடங்களாக உறவில்லாமல் இருக்கிறார். அதற்க்கு காரணம் தனது தாயாரின் நடத்தை சரியில்லாததனால். அதாவது கணவர் இருக்கும் பொழுதே வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு பெரிய பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். எந்த பிள்ளைகளும் அவரிடம் தொடர்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் பெற்றோரை கவனிக்காத குற்றம் வருமா? இதற்க்கு மார்க்கத்தில் தீர்வு என்ன?
ஜமிலா பிரான்ஸ் – france
பதில் : இஸ்லாத்தைப் பொருத்தவரையில் எந்த மார்க்கத்திலும் இல்லாத அளவுக்கு பெற்றோரைப் பற்றிய வலியுறுத்தல்கள் மிகவும் அதிகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.
பெற்றோருக்கு பணிவிடை செய்வதைப் பற்றி இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துவதற்கான அடிப்படைக் காரணமே அவர்கள் நம்மைப் பெற்றெடுத்ததுதான். இப்போது பிரச்சினைக்கு வருவோம், ஒரு தாய் கெட்ட நடத்தை உடையவளாக, அல்லது விபச்சாரியாக இருக்கிறாள் இப்படிப்பட்ட தாயை பிள்ளைகள் கவணிக்க வேண்டுமா? என்ற பிரச்சினை எழுகிறது.

சிறு வயதில் விட்டுச் சென்ற தாய்க்கு பணிவிடை செய்ய வேண்டுமா?

கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),என்னுடைய உம்மா நாம் சிறிய வயதில் இருக்கும் போதே சின்ன குடும்ப பிரட்சனை காரணமாக விவாகரத்து ஆகிவிட்டது.அதனால் நான் இப்போது என் உம்மாவுக்கு பணிவிடை செய்ய வேண்டுமா?பதில் தரவும்.
ABDUL GHANI, UNITED ARAB EMIRATES
பதில் : இதே போன்ற ஒரு கேள்விக்கு ஏற்கனவே நமது தளத்தில் பதில்கொடுக்கப்பட்டுள்ளது.
தாய் தந்தையுடன் வாழ முடியாது என்று விவாகரத்து வாங்கிவிட்டு சென்றுவிட்டார்களே தவிர உங்களுக்கும் தாய்க்கும் உள்ள உறவு முறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீங்கள் அவர் மகன், அவர் உங்கள் தாய் என்பது அப்படியேதான் இருக்கும்.

சந்திர, சூரிய கிரகணங்களும், கியாமத்து நாளும்.


2011ஆம் ஆண்டின் இரண்டாவதும் கடைசியுமான சந்திர கிரகணம் இன்று சனிக்கிழமை நிகழவுள்ளது. இதனை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

சூரியன் மறைந்ததும், இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 வரை இலங்கையில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்கமுடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்து 51 நிமிடங்கள் நீடிக்கவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.36 மணி முதல் 8.27 மணிவரை முழு சந்திர கிரகணம் தென்படும்.

குர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)


'இவ்வுலகின் வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் மூலம் மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும்' என்பதற்காகவே குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை இறைவன் விவரித்து கூறும்போது... அவற்றை மேலும் உறுதிப் படுத்துவதற்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புகள் மீதே அல்லாஹ் சத்தியமிட்டு அவ்வசனங்களை கூறுவதை குர்ஆனில் பல இடங்களில் நாம் காணலாம்..!

உதாரணமாக சில:-
வானத்தின் மீது சத்தியமாக 86:1
சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக 91:1
அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக  91:2
இரவு, பகல் மீது சத்தியமாக 92:1
அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக 95:1
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக 95:2
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக 95:3
காலத்தின் மீது சத்தியமாக 103:1

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். இஸ்லாத்தில் முளையவியல்.



"உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ."என்ற என் சென்ற பதிவில், செல்ஃபோனை காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் (1/4, 1/2, 1 மணிநேரம் என்று) மணிக்கணக்கில் அடிக்கடி செல்ஃபோனில் பேசுவோருக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரலாம் என்று பார்த்தோம். அதில் இருந்து என்னென்ன வழிகளில் அவர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் பார்த்தோம். அதில், Speaker-phone, Ear-phone, Landline-phone ஆகியன உபயோகித்தல் நலன் பயக்கும்  என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.

செல்போன் டவர்களின் கதிர்வீச்சு திறன் குறைந்தது


 செல்போன் டவர்கள் வெளியிடும் மின்காந்த அலைகளின் திறனை பத்தில் ஒரு பங்காக குறைக்கும் அரசின் உத்தரவு நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. இது குறித்து, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது: இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில்தான் செல்போன் டவர்களின் மின்காந்த அலை கதிர்வீச்சு கடுமையாக உள்ளன. உலகில் 90 சதவீத நாடுகளில் செல்போன் டவர்கள் வெளியிடும் கதிர்வீச்சின் சக்தியை விட இந்தியாவில் உள்ள செல்போன் டவர்களின் கதிர்வீச்சு 10 மடங்கு அதிகமாக உள்ளது.

அதிகரிக்கும் வெளிநாட்டுப் பயணங்களால் ஆட்டம் காணும் குடும்பக் கட்டமைப்பு.


அன்பான கணவன், அரவணைக்கும் மனைவி, கனிமொழி பேசும் குழந்தை, ஆரத்தழுவும் தாயும் தந்தையும் இவை, அனைவரும் ஆசிக்கும் கண் குளிர்ச்சி மிகு குடும்பக் கட்டமைப்பின் கண்கவர் பிரதிபலிப்புகள். அன்பும், அரவணைப்பும், அகமகிழ்வும் எந்தக் குடும்பத்தில் கோலோட்சுகிறதோ அங்கு தான் அறிவுத்திறனும், ஆளுமையும், அழகிய பண்பு நெறிகளும் ஒருங்கே பெற்ற ஆரோக்கியமிகு சந்ததிகள் உருவாக முடியும். ‘நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்’ என்ற முதுமொழி உணர்த்தும் வாழ்வியல் யதார்த்தமும் இதுவே.
ஆனால், உலகுக்கே வழிகாட்டவல்ல பல்கலைக்கழகங்களாய் திகழ வேண்டிய குடும்பக் கட்டமைப்புகள் இன்று குழந்தைகளை கருவறுக்கும் பலிபீடங்களாய் உருமாறி வருவது ஆழ்ந்து சிந்தித்து தீர்வு காணப்பட வேண்டிய சமூகவியல் பிரச்சினைகளில் ஒன்றாகும். எந்த சமுதாயத்தின் குடும்ப அலகு சிதைக்கப்படுகிறதோ அந்த சமுதாயத்தில் சீர்கேடுகள்; மலிந்து, அறப்பண்புகள் வழக்கொழிந்து, அபிவிருத்திப்பணிகள் அதள பாதாளத்திற்குச் சென்றுவிடும்.

Sunday, October 14, 2012

வானத்தில் ஏறிச் செல்ல செல்ல இதயம் சுருங்குகின்றதா?


ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்.
(அல்குர்ஆன் 6: 125)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் ஒரு மனிதன் வானத்தை நோக்கி மேலே செல்லச் செல்ல அவனது இதயம் இறுக்கமாகி விடுவதாக அதாவது சுருங்கி விடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதயத்தின் தொழிற்பாடு
மனித இதயத்தின் தொழிற்பாடு நுரையீரலிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட ஒக்ஸிஐன் நிறைந்த குருதியை மனித உடலின் ஒவ்வொரு கலத்திற்கும் பாய்ச்சுதல். இதன் பங்களிப்பை சீராக நிறைவேற்றுவதற்காக மனிதனுடைய வாழ்நாள் முழுவதிலும் இதயம் துடித்துக்கொண்டே இருக்கும். இதயத்துடிப்பு நின்றுவிடின் மனிதன் இறப்புக்கு உள்ளாவான். எனவே, ஏனைய எலும்புத் தசைகளைப் போல் அல்லாமல் இதயத்தசை இதயம் துடிப்பதற்கு ஏற்றவாறு சுருங்கி விரியும் அமைப்பில் படைக்கப்பட்டிருக்கின்றது. இதயத்தின் தொழிற்பாடு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது.

இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.


அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். – 06

இரு கடல்கள் சங்கமிக்கும் போது இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஓன்றையொன்று கடக்காது.  (அல்குர்ஆன் 55: 19,20)
அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும்,தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (அல்குர்ஆன் 25: 53)
அல்குர்ஆனின் கூற்றுப்படி நவீன விஞ்ஞானமும் இரு கடல்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையும், தடுப்பும் இருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரு கடல் நீரினதும் வெப்பநிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியன வேறுபடுகின்றன. உதாரணமாக,  Mediterranean sea> Atlantic ocean ஆகியவற்றின் நீரில் Mediterranean sea யினது நீரின் வெப்பம், உப்பின் தன்மை,அடர்த்தி Atlantic ocean னினது நீருடன் ஒப்பிடும்போது குறைவாககே உள்ளது.

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்.



பி. ஜைனுல் ஆபிதீன்.
புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள்ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள்தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

கலைஞர் செய்தி டிவியின் 2011 தேர்தல் களம் : மாநிலத் தலைவரின் அதிரடி நேர்கானல் (வீடியோ



கலைஞர் செய்தி டிவியின் 2011 தேர்தல் களம் : மாநிலத் தலைவரின் அதிரடி நேர்கானல் (வீடியோ)

தமிழக முதல்வர் ஜெயலலித்தா அவர்களுக்கு - வாக்காளன் எழுதுவது


தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு.....,

தேர்தலின் போது மட்டுமே உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு மகேசனாக தெரியும் ஒரு சாதாரண வாக்காளன் எழுதிக்கொள்வது...நீங்கள் நலமாக இருப்பீர்கள், ஆனால், நாங்கள் நலமாக இல்லை....மூன்றாவது முறையாக முதல்வரானதிற்கு வாழ்த்துக்கள். தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் அசுர பலத்துடன் மீண்டும் இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததற்கு உங்களின் ராஜதந்திரமோ, கூட்டணி பலமோ, களப்பணியோ காரணமில்லை, முந்தைய ஆட்சியாளர்களின் இமாலய தவறுதான் என்று நீங்களும் உணர்ந்தே இருப்பீர்கள்.ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல....                         

நரேந்திரமோடி & ஜெ..! (மெளனம் ஆன நம் உணர்வுகள்)



செல்வி.ஜெயலலிதா, தன்னை ஒரு அப்பட்டமான "பாஸிச வெறி
கொண்ட,       ஆர்.எஸ்.எஸ்.          அபிமான,          தீவிர ஹிந்துத்வா
அரசியல்வாதி" என அவ்வப்போது அடையாளம் காட்டிக்கொள்ள
கிடைக்கும் வாய்ப்புகளை என்றுமே தவற விட்டது   இல்லை...! 
அதுதான் ஜெ..!


முதன் முதலில்,அன்று தமிழ்நாட்டுக்கு யாரென்றே தெரியாத
'அத்வானி' என்பவர் பாபர் மசூதியை இடிக்க வேண்டி
'கரசேவை'க்காக அடியாள் தேடியபோது,                 அன்று
எதிர்க்கூட்டணியில் இருந்தாலும் தன் கட்சித்தொண்டர்களை
தாமாகவே 'கொலைச்சேவைக்கு' அனுப்பி
வைத்தார் ஜெ..!