.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Monday, October 15, 2012

செல்போன் டவர்களின் கதிர்வீச்சு திறன் குறைந்தது


 செல்போன் டவர்கள் வெளியிடும் மின்காந்த அலைகளின் திறனை பத்தில் ஒரு பங்காக குறைக்கும் அரசின் உத்தரவு நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. இது குறித்து, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது: இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில்தான் செல்போன் டவர்களின் மின்காந்த அலை கதிர்வீச்சு கடுமையாக உள்ளன. உலகில் 90 சதவீத நாடுகளில் செல்போன் டவர்கள் வெளியிடும் கதிர்வீச்சின் சக்தியை விட இந்தியாவில் உள்ள செல்போன் டவர்களின் கதிர்வீச்சு 10 மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, இதை குறைக்க அரசு முடிவு செய்தது. அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இதை செய்து முடித்துவிட்டன. தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் அவசியமானதுதான். அதே சமயம் மக்களின் நலன் காக்கப்படுவது அதை விட முக்கியமாகும். எனவே, தற்போது செல்போன் டவர்கள் வெளியிடும் மின்காந்த அலைகளின் கதிர்வீச்சு அளவு 10ல் ஒரு பங்காக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்காந்த அலைகளின் சக்தி குறை க்கப்படுவதை தொலை தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு அமலாக்கம் மற்றும் கண்காணிப்புப் பிரிவு உறுதி செய்யும். எந்த டவரிலாவது புதிய விதிமுறையை அமல்படுத்தாமல் அதிகளவு மின்காந்த அலை கதிர்வீச்சை வெளியிடுவது தெரிந்தால் அந்த நிறுவனத்துக்கு ஒரு டவருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஆனால், 95 சதவீத டவர்களில் புதிய விதிகள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டு விட்டன என்றார்.


No comments:

Post a Comment