Thursday, November 8, 2012
360 Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
பிரபல 'The American Board of Orthopaedic Surgery' மருத்துவர்களின் இணையதளம் |
தர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், இறைவனை தியானிப்பது பற்றியும் இறைத்தூதர் சொல்லும் பல்வேறு அறிவிப்புகளில் இரண்டை மட்டும் தலைப்பு தொடர்பாக நாம் பார்ப்போம்,
முதல் ஹதீஸ்
"மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.(அவை சரியாக இயங்குவதால், அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு...) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அஹ்மத், ஹதீஸ் எண் - 21959
லேபிள்கள்:
அறிவியல்
இஸ்லாமிய ஆண்டு உருவான வரலாறு
மகத்தான படைப்பாளன் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்:
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி ( 9:36 )
ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தை பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில்; கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி. (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
லேபிள்கள்:
இஸ்லாம்
Wednesday, November 7, 2012
தீபாவளி இலக்கு 125 கோடி! தமிழக அரசின் முன்னேற்றம்!
தீபாவளி இலக்கு 125 கோடி! தமிழக அரசின் முன்னேற்றம்!
அரசை எதற்கெடுத்தாலும் குறை சொல்லி வருகிறோம். மின்சார பற்றாகுறையை பற்றி குறை படாத தமிழர்களே இல்லை எனலாம். அதை எல்லாம் சரி கட்டும் விதமாக தடையற்ற சாராயத்தை தனது மக்களுக்கு தந்து ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையை எவ்வளவு அழகாக செய்கிறது பார்த்தீர்களா? தீபாவளிப் பண்டிகைக்கு 125 கோடி இலக்கு வைத்திருக்கிறார்களாம்.
Tuesday, November 6, 2012
ஒழுக்க சீலர் நபிகளார்
உலக மக்களை சீர்திருத்த ஏராளமான தலைவர்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்தள்ளனர். அவர்களின் கொள்கைளும் கோட்பாடுகளும் அறிவுரைகளும் மக்களின் மனதில் இடம்பெறவில்லை. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அரபுலுகில் தோன்றிய இறுதித் தூதர் நபிகளார் அவர்களின் கொள்கைளும் அறிவுரைகளும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.
நபிகளார் செய்த தீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள அன்றைய கால மக்களின் நிலையை தெரிந்து கொள்வது அவசியமாகும். அவர்கள் ஒழுக்கத்தில் எப்படியிருந்தார்கள் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் உதவி மூலம் அறிந்துகொள்வோம்.
லேபிள்கள்:
இஸ்லாம்
Sunday, November 4, 2012
வரதட்சணை விருந்து மவ்லூது விருந்து வித்தியாசம் என்ன
கேள்வி : பிறந்தநாள், பெயர்சூட்டுதல்,கத்னா செய்தல் போன்றவற்றிற்காகவீடுவீடாக இனிப்பு கொடுத்துவிடுதல்,கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம்ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல்,சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாகஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்புகொடுத்துவிடுதல், மரணித்தவர்க்காக 40ஆம் நாள் ஃபாதிஹா ஓதி பெட்டிச்சோறுபோடுதல், மரணித்தவர் வீட்டிற்குச்சென்றால் அங்கு வாழைப்பழம் கொடுத்தல்-இவையெல்லாம் எங்கள் ஊரில் நடைமுடைப்படுத்தப்படும் சடங்கு சம்பிரதாயங்கள்.நாம் இவற்றில் கலந்துக்கொள்ளாவிட்டாலும் நம் வீடு தேடி தின்பண்டங்களைக்கொடுத்துவிடுகிறார்கள். இவற்றை நாம் வாங்கலாமா?
மேலும் வரதட்சணை வாங்கிய மணமகன் வீட்டிலிருந்தும், மற்றும்பெண்வீட்டிலிருந்தும் நமக்கு சாப்பாடு கொடுத்துவிடுகிறார்கள். அதையும்வாங்கிக்கொள்ளலாமா?
லேபிள்கள்:
வீண் விரயம்
Subscribe to:
Posts (Atom)