.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Wednesday, November 7, 2012

தீபாவளி இலக்கு 125 கோடி! தமிழக அரசின் முன்னேற்றம்!

தீபாவளி இலக்கு 125 கோடி! தமிழக அரசின் முன்னேற்றம்!



அரசை எதற்கெடுத்தாலும் குறை சொல்லி வருகிறோம். மின்சார பற்றாகுறையை பற்றி குறை படாத தமிழர்களே இல்லை எனலாம். அதை எல்லாம் சரி கட்டும் விதமாக தடையற்ற சாராயத்தை தனது மக்களுக்கு தந்து ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையை எவ்வளவு அழகாக செய்கிறது பார்த்தீர்களா? தீபாவளிப் பண்டிகைக்கு 125 கோடி இலக்கு வைத்திருக்கிறார்களாம். 

(ஐரோப்பிய குடிகாரன்)கடந்த, 2003ல், 3,250 கோடியாக இருந்த மது விற்பனை, 2011 - 12ம் நிதி ஆண்டில், 20 ஆயிரத்து 180 கோடியாக உயர்ந்தது. நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டுக்கு, 23 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில், மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வளவு ஏற்றினாலும் நாங்கள் குடிப்பதில் மட்டும் எந்த குறையும் வைக்க மாட்டோம் என்று தளராத உறுதியோடு அரசுக்கு வருமானத்தை மேலும் மேலும் அதிகரிக்கின்றனர் குடிகாரர்கள். தங்களின் உடலையும் இழந்து தங்கள் குடும்பத்தையும் நிர்க்கதியில் விடும் இவர்கள் திருந்துவது எப்போது? இதற்கு அரசு துணை போகலாமா?"டாஸ்மாக்' கடைகளின் தினசரி விற்பனை, 72.25 கோடியாகவும், ஞாயிறு, விசேஷ தினங்களில் விற்பனை, 85 கோடியாகவும் உள்ளது. செப்டம்பர், 10ம் தேதி, "டாஸ்மாக்' மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.இந்த உயர்வுக்கு பின், "டாஸ்மாக்' விற்பனையில் உயர்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்டோபர் மாத மது விற்பனை, எதிர்பார்க்கப்பட்ட, 2,250 கோடிக்குப் பதில், 2,000கோடியாக சரிந்துள்ளது. அடடா...வருமானம் போச்சே...என்ன செய்வது?இதை சரிக்கட்ட, மதுபான கடைகளுக்கு, தற்போது 40 சதவீத கூடுதல் சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படும், 14 "டாஸ்மாக்' குடோன்களிலும் சரக்குகளை இறக்க முடியாமல், ஒவ்வொரு குடோன்களிலும், 50க்கும் மேற்பட்ட லாரிகள் காத்து நிற்கின்றனவாம்.கடைகளின் விற்பனையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கடைக்கும், 30 முதல், 40 சதவீதம் வரையில் அதிகமாக சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், கடைகள், பார்கள் சரக்கு பெட்டிகளால் நிரம்பி வழிகின்றன. ஒரு அரசு செய்யும் செயலா இது? குடியினால் வரும் இந்த பணத்தை வைத்து 10 வகைக்கும் மேலாக குழந்தைகளுக்கு சத்துணவு போடப் போகிறதாம் அம்மா! தகப்பனை படுகுழியில் தள்ளி விட்டு குழந்தைக்கு சத்துணவு கொடுத்து என்ன புண்ணியம்? இவ்வாறு இலக்கு வைத்ததனால் இனி அதிகாரிகள் வீடு வீடாக 'சாராயம் வாங்கல்லயோ சாராயம்' என்று கூவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.சாராயத்தை திறந்து விட்ட கலைஞர்: அந்த சாராயத்தை லாபகராமாக மாற்றி பீடு நடை போடும் அதிமுக: அந்த சாராயத்தையே உள்ளே இறக்கி விட்டு பொது இடத்துக்கு வரும் கேப்டன்: என்று எவருமே இந்த விஷயத்தில் சளைத்தவரில்லை என்பதை பறை சாற்றுகின்றனர். இதற்கு மக்கள்தான் ஏதாவது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.மதுரை அரசு மருத்துவமனை மதுபோதை மறுவாழ்வு மையத்தில், 2011ம் ஆண்டில் 273 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டு ஆகஸ்ட் வரை, 204 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டை விட, இந்த ஆண்டு அதிகம். இதுதவிர தினமும் 50 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதுதான் நம்மை ஆளும் அரசுகளால் கண்ட பலன்! ------------------------------------------------------------

ஒரு பக்கம் கட்டற்ற சாராயம்: மறு பக்கம் தடையற்ற சினிமா:இறைவா!.....தமிழகத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment