Friday, January 25, 2013
Tuesday, January 22, 2013
வெளிநாட்டுப் பயணங்களினால் சீரழியும் குடும்ப உறவுகள்.
மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் வேலை வாய்ப்பிற்காக பயணமாகின்றார்கள். இதில் கணவன், மணைவியாக பயணிப்பவர்கள் சிரலாக இருந்தாலும் பெரும்பாலும் வயது பாகுபாடின்றி பலரும் மத்திய கிழக்கு நோக்கி பயணிக்கவே செய்கின்றனர்.
திருமணம் செய்யாத ஆண், பெண் திருமணம் முடித்து மணைவியை நாட்டில் விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் கணவன். கணவனைப் பிரிந்து வெளிநாட்டு வேலைக்காக செல்லும் மணைவிமார்கள் என்று வரையரை இன்றி அனைவரும் இதில் பங்கெடுக்கின்றார்கள்.
வெளிநாட்டு மோகத்தின் காரணமான தங்கள் உறவுகளைப் பிரிந்து தொழில் வாய்ப்பிற்காக அங்கு செல்பவர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் சீர்கேட்டைப் பற்றி ஏனோ அலட்டிக் கொள்வதில்லை? மற்ற சமுதாயத்தவர்களை விட வெளிநாட்டு மோகத்தில் தொழில்வாய்ப்புத் தேடி அங்கு செல்பவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.
லேபிள்கள்:
இஸ்லாம்
கலைஞருக்கு TNTJ விவாத அழைப்பு!
ரிசானா விவகாரம் : கலைஞர் வைத்த வாதம் சரியா?
இலங்கை பெண்மணி ரிசானாவிற்கு சவூதி அரசு மரணதண்டனை அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இஸ்லாமிய விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் இது குறித்து அறிக்கை ஒன்றை கடந்த 21.03.2013 அன்று வெளியிட்டுள்ளார்.
மரணதண்டனைக்கு முடிவு கட்ட உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்ற தலைப்பில் அவரது அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தன்னை இலக்கியவாதி, முற்போக்குவாதி என்று சொல்லிக் கொள்ளும் மனுஷ்ய புத்திரன் என்பவர் நக்கீரன் இதழில் பொய்யின் மறுவடிவமாகவும், புளுகு மூட்டையின் மொத்த உருவமாகவும் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி, அதையே தனது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்டு நமக்கு ஆச்சர்யம்தான்.
லேபிள்கள்:
இஸ்லாம்,
பொது செய்திகள்
“விஸ்வரூபம் திரைப்படம்
“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்”
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)
Sunday, January 20, 2013
ரிசானா நபீக்கும், வெளிநாடு செல்லும் பெண்களும். (Video)
வெளிநாட்டு வேலை வாய்பை நாடி சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கை மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் என்ற பெண்மணி வீட்டு எஜமானியின் குழந்தையை கொலை செய்தார் காரணத்தினால் கடந்த 09.01.2013 அன்று சவுதி அரேபியாவில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் தொடர்பில் உலகம் முழுவதும் பலத்த விமர்சனங்களும், இஸ்லாமிய மார்க்கத்தின் குற்றவியல் தண்டனை தொடர்பாகவும் வாதப் பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விதமாக பேசப்பட்ட உரை.
லேபிள்கள்:
வீடியோ
இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை : அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்
குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.
தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.
டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.
லேபிள்கள்:
பொது செய்திகள்
Subscribe to:
Posts (Atom)