.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Sunday, June 2, 2013

உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் .

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன்Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.


தேனீக்களின் வழி அறியும் திறன்

தேனீக்கள் மூலம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற செய்தி தமிழில் எல்லா ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது. அச்சு அசலாக ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைத்து ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு தான் இச்செய்தி வெளியானது. ஏதோ ஒரு ஊடகத்தில் வந்ததை அப்படியே காப்பி அடித்து எல்லோரும் பயன்படுத்தியுள்ளனர். ஜாக்ரப், மே 23- வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அய்ரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990இல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணி வெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 90,000 வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், பலனளிக்கவில்லை. கண்ணிவெடியில் சிக்கி இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்நாட்டில் உள்ள ஜாக்ரப் பல்கலைக்கழக வேளாண்மை துறை பேராசிரியர் நிகோலா கேசிக், தேனீக்களை பற்றி ஆய்வு செய்தார். அவற்றை தொடர்ந்து கண்காணித்ததில் அவை டிஎன்டி (டிரை நைட்ரோ டோலுவின்) என்ற வெடிபொருள் வாசனை மூலம் இரைதேடுவதைக் கண்டறிந்தார்.