.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Sunday, April 28, 2013

சீரழியும் பிள்ளைகள்; சிந்திப்பார்களா?

 சீரழியும் பிள்ளைகள்; சிந்திப்பார்களா பெற்றோர்கள்? சமீபத்தில் இங்கிலாந்தில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை வரவழைப்பதாக அமைந்துள்ளது. ஆம்! இங்கிலாந்தில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் சிறார்கள் பெருமளவில் இன்டர்நெட் ஆபாசத்திற்கு அடிமையாகி வருவதாக அந்த புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளி சிறார்கள் 3000 பேர் இன்டர்நெட்டில் ஆபாசப் படம் பார்த்தும், ஆபாச நிகழ்ச்சிகளைப் பார்த்தும் சிக்கி பள்ளிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை. எதிர்பார்த்ததை விட டீன் ஏஜ் வயதிலும், அதற்கு முந்தைய வயதிலும் பெருமளவிலான சிறார்கள் ஆபாசத்திற்கு அடிமையாகியிருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. 

தினசரி 15 பேர் : 

பணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா?


  நோன்பு துறக்க யார்யார் பள்ளிவாசலுக்கு வரலாம்? பணக்காரர்கள் வரலாமா? வசதியுள்ளவர்கள் சென்றால் அது யாசகம் கேட்பதாக ஆகுமா? முஹம்மத் சபியுல்லாஹ் பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலில் நோன்பு துறக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. கஞ்சி காய்ச்சி வழங்கப்படவில்லை. இது நம்முடைய வசதிக்காக நாம் செய்து கொண்ட ஏற்பாடாகும். பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சும் ஏற்பாடு இல்லாவிட்டால் அதனால் ஒரு குற்றமும் வராது. நம்முடைய வசதிக்காக நாம் செய்யும் காரியம் என்பதால் பள்ளிவாசலில் நோன்பு துறக்க பணக்காரர்கள் செல்லலாமா என்ற கேள்விக்கு எளிதில் விடை காணலாம். பள்ளிவாசலில் நோன்பு துறப்பதற்காக மக்களிடம் நிதி திரட்டும்போது தர்மம் என்ற அடிப்படையில் நிதி திரட்டுவதில்லை. ஏழைகளுக்கு மட்டும் தான் இதை வழங்குவோம் என்று கூறி நிதி திரட்டுவதில்லை வீடுகளில் நோன்பு துறந்து விட்டு பள்ளிவாசலுக்கு மக்ரிப் தொழ வருவது பாதிக்கக் கூடாது என்பதற்காகத் தான் பள்ளிவாசலில் நோன்பு துறக்கும் வசதிகள் செய்யப்படுகின்றன. நோன்புதுறக்கும் உணவு கிடைக்காமல் ஏழைகள் சிரமப்படுவார்கள் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படவில்லை. இதை வசதி படைத்தவர்களும் பயன்படுத்துவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே தான் நிதி உதவி செய்கின்றனர். எனவே இது யாசகத்தில் சேராது. செல்வந்தர்களும் ஏழைகளும் ஒரே மாதிரியான உணவுடன் நோனு துறந்து சமத்துவம் காட்டுவதை நாம் வரவேற்க வேண்டும். கீழ்க்காணும் ஆக்கத்தையும் பார்க்கவும்