.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Saturday, October 27, 2012

2012 டிசம்பர் 21 ம் தேதி உலகம் அழியும் என்று நாஸா (NASA) வின்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக கூறி பலரும் ஒரு குறுந் தகவலை (SMS) பரப்பி வருகின்றார்கள்.


உண்மையில் டிசம்பர் 21ல் உலகம் அழியுமா? உலகம் அழியும் நாளை விஞ்ஞானிகளினால் எதிர்வு கூற முடியுமா? போன்ற கேள்விகளுக்கான பதிலை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த வருடம் டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்பது தொடர்பில் ஏராளமான கதைகள் தற்போது சொல்லப்பட்டு வருகின்றன. இதற்கான அடிப்படை காரணம் பண்டைய மாயன் காலண்டரின் நாட்காட்டி சரியாக 2012 டிசம்பர் 21ல் முடிவடைகின்றது. மாயன் காலண்டரை நம்பக் கூடியவர்கள்தாம் டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு எத்தனிக்கிறார்கள்.
டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற மாயன் காலண்டரின் மௌட்டீகக் கொள்கையை நிலை நாட்டுவதற்கு எத்தனிக்கும் கும்பல் 2012 என்ற தலைப்பில் கட்டுக் கதைகளை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தையும் அண்மையில் வெளியிட்டமை குறிப்பிடத் தக்கது.

பெரு நாள் வாழ்த்து ‘ஈத் முபாரக்’ சொல்லலாமா?

பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது.
ஒருவர் தனது தாய் மொழியில் தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீசுக்கு முரணில்லாத வகையில் துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் மறுப்பு இல்லை.
ஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்றால் அது அல்லாஹ்வுக்கும்இ அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரமாகும்.

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)!


கண்ணியமிக்க அல்லாஹூதஆலா தன்னுடைய திருமறையில்:      

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணைகற்பிப்பவராக அவர் இருந்ததில்லை. அவனது அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துபவராகவும் இருந்தார்.அவரை அவன் தேர்வு செய்தான்.நேரான வழியில் செலுத்தினான். (அல்குர்ஆன்: 16 : 120-121)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர!  ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்...

Friday, October 26, 2012

பிறை பார்த்தல் - ஆதாரங்கள் முழு தொகுப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்

பிறையை கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டும். முன்கூட்டியே கணிப்பது மார்க்க அடிப்படையில் தவறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அனைத்தும் இங்கு தொகுந்து தரப்பட்டுள்ளது.
ஆதாரம் 1 

மாதத்திற்கு 29 நாட்களாகும். எனவே பிறையை காணாமல் நோன்பு வைக்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்ப்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக்கி கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புஹாரி


(ஒவ்வொரு மாதமும் 29 முடிந்த பிறகு பிறை பார்க்க வேண்டும். பிறை தெரிந்தால் அந்த மாதம் முடிந்து அடுத்த மாதம் துவங்கி விட்டது. முடியவில்லை என்றால் முந்தைய மாதம் இன்னொரு நாள் தொடருகிறது!)
-----------------------------------------------------------------------------------------------------------------------

Monday, October 22, 2012

தொலைக் காட்சியில் தொலைந்து விட்ட சமுதாயம் – தொடர் 2


விபச்சாரத்திற்குரிய இரண்டாவது காரணம் பார்வை

நமது பார்க்கும் பார்வை நல்ல பார்வையாக நல்லவற்றைப் பார்ப்பதற்கு ஆர்வமுடையவர்களாக இருக்க வேண்டும். நல்லதைப் பார்ப்பதுதான் நமது உள்ளத்தில் என்றைக்கும் இடம் பிடிக்கும். அதை பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப் படுவோம். ஆனால் இன்றைய தொலைக் காட்சிகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் எல்லாம் முழு சமுதாயத்தையும் சீரழிக்கின்ற அளவிற்கு ஆபாசங்கள் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மனிதர்களின் கண்களுக்கு விருந்தாக மாலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொரு மணி வரையும் காட்டப்படுகிற தொலைக் காட்சி சீரியல்களில் திரும்பத்திரும்ப எதைக் காட்டப்படுகிறது என்று பார்த்தால் அடுத்தவள் கணவனை எப்படிக் கூட்டிச் செல்வது, அடுத்தவன் மனைவியோடு எப்படி தவறாக நடக்க முடியும்? எப்படி சொத்துக்களை ஏமாற்றிப் பறிப்பது?