.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Saturday, December 8, 2012

முஸ்லிம்களை சீண்டிய துப்பாக்கி வரிசையில் கமலின் விஸ்வரூபம்.


‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” என்ற பெயரில் நபியவர்களை கேவலப்படுத்தும் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டமையினால் முழு முஸ்லிம் உலகும் கொந்தளித்தமையை நாம் அறிவோம். இஸ்லாத்தை அதன் உள்ளார்ந்த கருத்துக்களை நேருக்கு நேர் சந்தித்து வாதிக்கத் திராணியற்றவர்கள் இஸ்லாத்தின் மீதும் இறைவனின் தூதரின் மீதும் அபாண்டத்தையும், அசிங்கத்தையும் பொய்யாகக் சித்தரித்து பரப்புவதின் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியை குறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
இறைவனின் இந்த மார்கத்தை யாராளும் அழிக்க முடியாது என்பதை அதன் வேகமான வளர்ச்சியின் மூலம் இறைவன் நாளும் உணர்த்திக் கொண்டிருக்கிறான்.

Friday, December 7, 2012

பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு


1949-ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.


வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.