கிறிஸ்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்மஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.
போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்.தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் :16வது “பென்னடிக்ட்” போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் (‘Jesus of Nazareth: The Infancy Narratives’) என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் “டிசம்பர் 25″ என்பது தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை கூறியுள்ளார்.