.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Friday, November 30, 2012

இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் பாதிஹா அத்தியாயம் ஓத வேண்டுமா?



தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் அவசியம் ஓத வேண்டும் என்று நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக் அத்களில் மட்டும் அதை செவி தாழ்த்திக் கேட்க வேண்டும் என்றும் எதுவும் ஓதக் கூடாது என்றும் நாம் கூறுகிறோம். இது சரியல்ல. இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் அல்ஹம்து அத்தியாயம் அவசியம் ஓத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது பற்றி விளக்கமாக இப்போது பார்ப்போம்.
இமாமைப் பின்பற்றி தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் அல்ஹம்து சூராவைக் கண்டிப்பாக ஓத வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வந்துள்ளன. சிலர் அந்த ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் கண்டிப்பாக அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்.
தங்களுக்குச் சான்றாக அவர்கள் எடுத்துவைக்கும் ஆதாரங்களை முதலில் காண்போம்.
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مَكْحُولٍ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ فَلَمَّا انْصَرَفَ قَالَ إِنِّي أَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِي وَاللَّهِ قَالَ فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْقُرْآنِ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا  رواه الترمدي

Tuesday, November 27, 2012

சிறிய துஆக்கள்

Monday, November 26, 2012

துப்பாக்கி திரைப்படம் குறித்து புதிய தலைமுறையின் நேர்பட பேசு - Video!


PART - 1

PART - 2

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பர்தா அணிந்து உரை!



Sumaiya Karim, wearing hijab speaks in British Parliamentபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து உரையாற்றிய மாணவி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.
பிரிட்டிஷ் நாடு தேர்தல் ஜனநாயகத்தின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டில், மாணவர்கள், இளைஞர்களிடையே ஜனநாயக ஆர்வத்தைத் தூண்டவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில்  இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து உரையாற்றவும்  தேர்ந்தெடுக்கப்படும் சில இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதுண்டு.

இளைஞர் நாடாளுமன்றம் என்றழைக்கப்படும் இந்நிகழ்வுகளில் 11 வயது முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அவ்வகையில், மேற்கு லண்டனில் உள்ள வோக்கிங்காம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமையா கரீம் என்கிற 16 வயது மாணவி பிரித்தானிய இளைஞர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விதம் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தலை மற்றும் கழுத்தை மறைக்கும் வகையிலான இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப் (பர்தா) அணிந்த வண்ணமே மாணவி  சுமையா உரை நிகழ்த்தினார். இதன்மூலம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், ஹிஜாப் அணிந்து  உரையாற்றிய முதல் பெண்ணாக சுமையா திகழ்கிறார்.




தினம் ஒரு தகவல்

தெரியாததை தெரிந்து கொள்வோம்
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

தமிழில் சில செய்திகள் உங்களுக்காக :

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்.... 


Sunday, November 25, 2012

கணணியில் தோன்றும் சில த‌வறுகளும் , அதற்கான விளக்கங்களும்!


கணணி முடங்கி போகும் நேரங்களில், த‌வறுகள் காட்டப்படும். ஏன்இவ்வாறு வருகின்றது என்று தெரி யாமல் குழம்பி போயுள்ளவர்கள் ஏராளம்.
கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும் கீழே தரப்பட்டுள் ளன.
.
1. மொனிட்டரின் எல்.இ.டி விளக்கு விட்டு விட்டு எரிகிறது:
.
இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப்போய் இருக்கலா ம். மொனிட்டர் கேபிள், டேட்டா கேபி ள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற் றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத் தையும் சரி பார்க்கவும்.

மின் கட்டண‌த்தை இ‌னி எஸ்.எம்.எஸ்.‌சி‌ல் அ‌றியலா‌ம்!


மின்சார கட்டணம் எவ்வளவு என்பதை எஸ்.எம்.எஸ்.மூலம் பொதும‌க்க‌ள் தெ‌ரி‌ந்துகொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு மின்சார வாரியம் அ‌றி‌வி‌ த்து‌ள்ளது.
த‌மிழக‌த்‌தி‌ல் 1 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 725 வீடுகளில் மின்சா ரம் பயன்படுத்தப்படுகிறது. 29 லட்சத் து 80 ஆயிரத்து 814 வர்த்தக நிறுவன ங்கள் மின்சாரத்தை உபயோகிக்கி றார்கள். 5 லட்சத்து 53 ஆயிரத்து 224 தொழிற் சாலைகள் மின்சாரத்தைபயன்படுத் துகின்றன.

சினிமா கூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி?



கூத்தாடி விஜேயின் இஸ்லாத்திற்கு எதிரான, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ‘துப்பாக்கி’ திரைப் படத்திற்கு எமது எந்தக் கண்டனமும் இடம்பெறவில்லையே! என்ற வாசகர்களின் ஆதங்கத்திற்கு உகந்ததாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வார இதழ் உணர்வில் வெளியான அது பற்றிய கேள்வி பதிலை அப்படியே தருகிறோம்.
கேள்வி 1
நம் வீட்டிற்கு  முன் ஏதாவது  ஒரு நாள் ஒரு நாய் குலைத்தால் அதை விரட்டாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் அதையே பொழுதுபோக்காக வைத்து தினமும் வந்து குலைத்தால் அந்த நாயை விரட்டத்தான் வேண்டும்.
அதேபோல் முதலில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார், கமலஹாசன்  போன்ற  கூத்தாடிகள்தான்  சில படங்களில்  முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தார்கள். அதை நாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது மாதாமாதம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தக் கூத்தாடிகளின் வரிசையில் இப்போது கூத்தாடி சிம்பு,  சூர்யா,  விக்ரம்,  விஜய், நாளை யாரோ…