.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Sunday, November 25, 2012

மின் கட்டண‌த்தை இ‌னி எஸ்.எம்.எஸ்.‌சி‌ல் அ‌றியலா‌ம்!


மின்சார கட்டணம் எவ்வளவு என்பதை எஸ்.எம்.எஸ்.மூலம் பொதும‌க்க‌ள் தெ‌ரி‌ந்துகொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு மின்சார வாரியம் அ‌றி‌வி‌ த்து‌ள்ளது.
த‌மிழக‌த்‌தி‌ல் 1 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 725 வீடுகளில் மின்சா ரம் பயன்படுத்தப்படுகிறது. 29 லட்சத் து 80 ஆயிரத்து 814 வர்த்தக நிறுவன ங்கள் மின்சாரத்தை உபயோகிக்கி றார்கள். 5 லட்சத்து 53 ஆயிரத்து 224 தொழிற் சாலைகள் மின்சாரத்தைபயன்படுத் துகின்றன.
மின்சாரத்தை பயன்படுத்துவோர்களின் வீடுகள், நிறுவனங்களுக்கு மின்சாரத்துறை சார்பில் ஊழியர்கள் மீட்டரில் கணக்கெடுத்து அதற் கான கார்டுகளில் எழுதி வைப்பார்கள். இந்த கார்டுகளை கொண்டுபோய் மின்சார அலுவலகத்தில் காண் பித்து உரிய கட்டணத்தை செலுத்து வார்கள். மின்சார கட்ட ணத்தை ஆன் லைனிலும் கட்டலா ம். தபால் அலுவ லகத்திலும் கட்ட லாம். மின்சாரத்தை பயன்படுத்துவோரு க்கு நன்மைசெய்யும் விதமாக மின்சார வாரியம் மதிப்பு கூட்டு சேவையாக எஸ்.எம்.எஸ்.மூலம் அவர்களு டைய மின்கட்டணம் எவ்வ ளவு என்பதை தெரிவிக்க உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெ ளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்தில் மின் உபயோகிப்பாளர்க ள் தங்களுடைய செல்போன் எண்ணை மின்சார அலுவலக பகுதி பிரிவு அலுவலக ங்களுக்கு சென்று பதிவு செய்யுங்கள். அந் த பதிவு இன்று முதல் செய்யப் படுகிறது.
அவ்வாறு பதிவு செய்தால், அந்த செல்போ னுக்கு அவர்களுடைய மின் கட்டணம் எவ் வளவு என்றவிவரத்தையும் கட்டணத்தை செலுத்த கடைசிநாள் எது? என்ற விவரத் தையும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைப்போம். ஏற்கனவே நடை முறையில் உள்ள கார்டு முறையும் உண்டு எ‌ன்று ‌‌ம‌ி‌‌ன்வ‌‌ா‌ரிய‌ம் தெரி வித்துள்ளது.

No comments:

Post a Comment