.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Monday, October 15, 2012

சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித் தொகை : கலெக்டர் அறிக்கை


சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திட, விண்ணப்பம் செலுத்திட இன்று கடைசிநாள் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திர சேனன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பாரசீகர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல், சட்டம், கால்நடை மருத்துவம், மேலாண்மை கல்வி போன்ற தொழில்நுட்ப கல்வி பயில வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது,
இதைப் பெற இணையம் மூலம் விண்ணப்பிக்க 15-10-2012 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுவரை தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத சிறுபான்மை மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும்,   www.momascholarship.gov.in   என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மதிப்பெண், ஜாதி, வருமானம், இருப்பிடம் ஆகிய சான்றிதழ்கள், கல்வி கட்டண ரசீது, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சேர்த்து சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment