ஆலங்குடி: ஆவி பயத்தால் புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸுக்கு வேப்பிலை கட்டி ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து, ஆலங்குடி வழியாக கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பேராவூரணி வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், ஆவிகள், பேய்கள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும், திருவரங்குளம் ஆர்.எஸ்.பதி காடு, கொத்தமங்கலம், மேற்பனைகாடு, காவிரியாறு பாலம் வழியாகச் செல்கிறது. இந்த வழியாகச் செல்லும் போது, பஸ் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், மேற்பனைகாடு காவிரியாறு பாலத்தில் பைக்கில் சென்றவர்கள் மீது இந்த பஸ் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுப்பகுதியில் செல்லும்போது, இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நின்றுவிடும். இரவு நேரங்களில் பெரும்பாலும் சில பயணிகளுடன் டிரைவர், கண்டக்டர் மட்டுமே தனியாக வரும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் பஸ் பழுதாகி நிற்பதால், இந்த பஸ்சில் பயணிக்க பயணிகள் பயப்படுகின்றனர். மேலும், டிரைவர், கண்டக்டர்களும் இந்த பஸ்சில் பணி செய்ய தயங்குகின்றனர். இந்த பஸ்சில், "ட்யூட்டி' பார்க்க பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் தயங்குவதுடன், தங்களை வேறு பஸ்சுக்கு மாற்றித்தரும்படி கூறுகின்றனர். ஆனால், கோட்ட மேலாளர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து பயந்து கொண்டே வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் புதுக்கோட்டையில் உள்ள அம்மன்கோவிலில் அபிஷேகம் செய்தனர். கோவிலில் வைத்து வழிபட்ட எலுமிச்சை பழம், வேப்பிலையை பஸ் முன்னால் கட்டி, பஸ்சை ஓட்டி வருகின்றனர்.
பத்திரிக்கை செய்தி:-
25-08-2012
இறந்தவர்களின் ஆவி (உயிர்) மீண்டு வந்து உயிரோடு இருப்பவர்களைப் பிடித்துக் கொள்கிறது அது தான் பேய் என்று சிலர் கருதுகிறார்கள். இதற்கு சாத்தியமே இல்லை என்று இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.
''அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதைத் தன்னிடத்தில் நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை வாழ்வதற்காக அனுப்பி விடுகிறான்'' (அல்குர்ஆன் 39:42)
''அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ''என் இறைவனே! என்னைத் திரும்ப உலகுக்குத் திருப்பி அனுப்புவாயாக!'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 23:99)
''நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக'' என்றும் கூறுவான். அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையேயன்றி வேறில்லை; அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.'' (அல்குர்ஆன் 23:100)
மரணித்த பிறகு எந்த உயிரும் இந்த உலகத்திற்கு திரும்பி வராது, அவ்வுயிருக்கும் இவ்வுலகிற்கும் இடையில் திரை இருக்கிறது. அதை உடைத்துக் கொண்டு வரவே முடியாது. எனவே இறந்த மனிதனின் உயிர் உயிருடன் இருப்பவரின் உடலில் சவாரி செய்ய முடியவே முடியாது. எனவே இறந்தவனின் ஒரு ஆவி மற்றவனின் உடலில் ஏறும் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு வரலாம். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு அறவே வரக் கூடாது. ஆனால் நம்மிலும் சிலர் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை பேய் பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டு தர்ஹாக்களில் கட்டிப் போட்டு அவர்களின் நோயை மேலும் அதிகப்படுத்துகிறார்கள். அரசாங்கம் இது போன்று ஏர்வாடி, வேளாங்கண்ணி, நாகூர் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நோயாளிகளை மீட்டு அவர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும். இதனால் பலரின் வாழ்வை அழிவிலிருந்து மீட்கலாம்.
பஸ் டிரைவருக்கு வேப்பிலை கட்டப்பட்டதால் கொஞ்சம் தைரியத்தோடு வண்டியை ஓட்டுவார். அது ஒன்றுதான் இதில் கிடைத்த நன்மை. இதன் மூலம் காசு பார்க்கும் மந்திரவாதிகளுக்கும் சில நன்மைகள். இங்கு சவுதியில் பேய் ஓட்டுகிறேன் என்று யாராவது காசு பார்க்க ஆரம்பித்தால் அவர் கம்பி எண்ண வேண்டியதுதான். :-)

No comments:
Post a Comment