அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்கியுள்ள சாண்டி புயலால் அங்கு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரிபியன் கடல் பகுதியில் உறுவான சாண்டி புயல் அந்த பகுதியிலிருந்து நகர்ந்து அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களையும் தாக்கியுள்ளது. இதனால் இந்த மாகானங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு இதுவரை சந்திக்காத பாதிப்புகளை இப்பகுதி சந்தித்துள்ளது.
கடல் அலைகள் 11 அடி உயரத்துக்கு மேல் எழும்புவதால் மன்ஹாட்டன் உள்ளிட்ட கடலோரப் பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப் படுத்தப் பட்டு வருகின்றனர். பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
இந்த சூறாவளியால் அமெரிக்கா செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:
Post a Comment