.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Tuesday, October 30, 2012

போயா தினத்தில் பிராணிகளை அறுக்கத் தடை உள்ளதா?



அப்துர் ராஸிக் ரபீக்தீன் B.Com (பொதுச் செயலாளர், SLTJ)
நமது இலங்கை திரு நாட்டில் மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியிருப்பதை போன்று வேறு எந்த நாட்டிலும் வழங்கப்பட்டிருக்காது என்று சொல்லும் அளவிற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவான பொன் எழுத்துக்களால் சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசியல் யாப்பில் 10 வது ஷரத்தில் “ ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கோ ஏற்றுக்கொள்வதற்கோ சுதந்திரம் இருப்பதுடன் எந்த கொள்கையையோ நம்பிக்கையையோ ஏற்றுக்கொள்வதற்கும் சுதந்திரம் உண்டு. அத்துடன்  சிந்திக்கும் சுதந்திரமும், மன சாட்சியின் சுதந்திரமும், மத சுதந்திரமும் உண்டு” என்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தற்போது நடைமுறையில் இன துவேசிகளாலும் காவி தீவிரவாதிகளாலும் இந்த நாட்டின் மத சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டே உள்ளன. பள்ளிவாசல்கள் இடிக்கப்படுவதும், எரிக்கப்படுவதும் தற்போது இன வெறியர்களால் மேற்கொள்ளப்படும் ஈனச் செயல்களாகும். இவற்றை சரியான முறையில் கண்டிக்காதவர்களும்ää எதிர்க்காதவர்களும், எதிர்ப்பவர்களை தடுப்பவர்களும் சமூகத்தில் தலைவர்களாக மார்க்க அறிஞர்களாக உலா வருவது இந்த சமூகத்தின் சாபக்கேடாகும்.
இது போன்று பல வருடங்களாக போயா தினங்களில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று சட்டம் இருப்பதாக முஸ்லிம் அல்லாதவர்களும் அரசு தரப்பை சார்ந்தவர்களும் குறிப்பாக பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுகம் கூறி வருகிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதை ஆய்வு செய்யாத நமது சமுதாயம்ää வல்ல இறைவனால் நமக்கு கடமையாக்கப்பட்டிருக்கின்ற உழ்ஹிய்யா குர்பானியையும் போயா தினங்களில் நிறைவேற்றக் கூடாது என்று நினைத்து மார்க்கக் கடமையையும் விட்டு விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் மார்க்க அறிஞர்கள் என்று மார் தட்டக் கூடியவர்களே போயா தினத்தில் குர்பான் கொடுக்காதீர்கள் என்று அறிக்கை விடுகிறார்கள். என்ன பரிதாப நிலை?
சட்டம் இருக்கிறதா இல்லையா எனற ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னால், ஒரு வாதத்திற்கு இவ்வாறு ஒரு சட்டம் இருந்தாலும் அந்தச் சட்டம் நியாயபூர்வமானது தானா? அதை முஸ்லிம்களாகிய நாங்கள் அவசியம் கடைபிடித்தொழுக வேண்டுமா? என்பதை முதலில் நாம் சரிவர அறிய வேண்டும்.
சட்டம் இருந்தாலும் கட்டுப்பட வேண்டுமா?
உதாரணத்திற்கு இலங்கை அரசாங்கம் முஸ்லிம்கள் போயா தினத்தில் பள்ளியில் பாங்கு சொல்லக் கூடாது, தொழக் கூடாது என்று சட்டம் போடுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது, அரசாங்கம் சட்டம் போட்டு விட்டது; எனவே, இலங்கை முஸ்லிம்களாகிய நாம் போயா தினங்களில் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லாமல் இருப்போம்; தொழாமல் இருப்போம் எனும் முடிவுக்கு வந்து, நாம் புத்த நாட்டில் வாழ்வதனால் போயா தினத்தில் மாத்திரம் பாங்கு சொல்லாமல் தொழாமல் விட்டுக் கொடுப்போம் என்று அறிக்கை விடுவது சரியா? அல்லது இது இஸ்லாம் மார்க்கத்தை கடைபிடிப்பதற்கு தடைவிதிக்கும் மத துவேஷம்; முஸ்லிம்களின் மத உரிமைகளை பரிக்கும் கயமைத்தனம் என்று இந்த அத்துமீறும் சட்டத்திற்கெதிராக போராடுவது சரியா? இதில் எது அல்லாஹ்வை திருப்திபடுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வல்ல இறைவன் தனது திரு மறையில் சூரத்துல் அன்ஆமில் 121வது வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ (121)6
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டவைகளை உண்பதை தடுப்பதற்கு எதிரிகள் சூழ்ச்சி செய்வார்கள். தர்க்கம் செய்வார்கள். ஆனால், அதற்கு முஸ்லிம்கள் கட்டுப்படக் கூடாது என்பதையும் அவ்வாறு கட்டுப்பட்டால் கட்டுப்படுபவர்களும் இணை கற்பிப்பவர்கள் என்றும் மேற் குறிப்பிட்ட வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
எனவே, குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்கு எதிராக சட்டமே போட்டாலும் மார்க்கத்தின் அடிப்படையில் அதற்கு கட்டுப்பட முடியாது என்பதை ஐயம்திரிபற எம்மால் விளங்க முடிகிறது. இவ்வாறான சட்டங்களுக்கு ஏற்றாற்போல் வார்த்தை ஜாலம் பேசி, அறிக்கை விட்டு, தாளம் போடுபவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களே.
மாமிச உணவை புத்தர் தடை செய்துள்ளாரா?
போயா தினங்களில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று சொல்பவர்களும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும்: ‘புத்த மதத்தில் பிராணிகளை அறுக்கவே கூடாதென்று அல்லவா இருக்கிறது, பிராணிகளை அறுத்து சாப்பிடுவது புத்த மதத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக அல்லவா அமைந்துள்ளது’ என்று வலுவான சான்றுகளை முன் வைத்து விட்டு, ‘போயா தினங்களில் குர்பானும் கொடுக்கக் கூடாது’ என்று சொன்னால் ஓர் அளவிற்காவது நியாயம் இருக்கிறதா? என்று சிந்திக்க முடியும். புத்த மதத்தை ஆய்வு செய்து பார்த்தால் பிராணிகளை அறுத்து சாப்பிடும் விடயத்தில் இது கால வரைக்கும் புத்த மக்களே அறிந்து வைத்திராத பல உண்மைகள் அவர்களின் நூற்களில் புதைந்து கிடப்பதை காணமுடிகிறது.
புத்தப் பெருமான் “ත්‍රිකෝටි පාරිශුද්ධ මාංශය” அதாவது மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசத்தை உண்பதற்கு அனுமதித்துள்ளார். இவ்வகையான மாமிசங்களை உட்கொள்வதால் எந்த பாவமும் ஏற்படாது என்றும், நானே அவற்றை உண்ணுகிறேன் என்றும் திரிபிடகாவில் மச்சிம நிகாய (ත්‍රිපිටකයේ මජ්ඣිම නිකාය) எனும் நூலில் ஜீவக சூத்தரயவில் (ජීවක සූත්‍රය) குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசம் என்பது 1. අදිට්ඨං (அறுக்கப்படும் மாமிசம் தனக்காக அறுக்கப்பட்டதென்று உண்பவர் கண்டிருக்கக் கூடாது); 2. අසූතං (கேள்விப்பட்டிருக்கக் கூடாது); 3. අපරිසංකිතං (சந்தேகப்பட்டிருக்கக் கூடாது) என்பதாகும். இந்த மூன்று நிபந்தனைகளுக்கு அப்பால் பட்டதை தாராளமாக உண்ணலாம் என்பதே புத்த பெருமானின் போதனையாகும்.
இதே “ත්‍රිකෝටි පාරිශුද්ධ මාංශය” அதாவது மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசம் குறித்து “පවත්ත මංසං”பவத்த மந்சந் என்று “මහා වග්ගපාළිය” மகா வக்கப்பாலிய எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “පවත්ත මංසන්ති වික්ඛායිතක මංසං” அதாவது தனக்காகவே அறுக்கப்பட்டதை அறியாமலும் தனக்காக அறுக்கப்படாமலும் வேறொருவரால் அறுக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பிராணியின் இறைச்சி அந்த மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசமாகும். அதை உண்ணலாம்; பாவம் அல்ல.
எனவேää புத்தரின் போதனை படி மேற்குறிப்பிட்ட மூன்று வகையான காரணங்களுக்கும் உட்படாத மாமிசங்களை தாராளமாக உண்ணலாம். புட் சிடியில் (குழழன ஊவைல) உள்ள மாமிசங்கள் யாருக்காகவோ உண்பதற்கு அறுக்கப்பட்டதாகும். எனவேää புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அந்த மாமிசங்களை தாராளமாக உண்ணலாம். அதில் எந்தச் சந்தேகமும் எள்முனையளவுக்குக்கூட கிடையாது என அடித்துச் சொல்லலாம்.
(குறிப்பு: மேற் குறிப்பிடப்பட்ட மூன்று காரணங்களும் அறிவுப்பூர்வமானது கிடையாது என்பது தனி விஷயமாகும்.)
மேலும், திரிபிடகாவில் உள்ள அந்குத்தர நிகாயவில் (අංගුත්තර නිකාය) புத்த பெருமான் பன்றியின் மாமிசம் உட்கொண்டதற்கு ஒரு சான்று கிடைக்கிறது. புத்த பெருமான் விசாலா எனும் ஊரில் கூடாகார எனும் மண்டபத்தில் இருக்கும் போது உக்க (උග්ග)  எனும் பெயருடைய ஒருவர் வந்து புத்தருக்கு முன்னால் “ஆண்டவரே! நான் உங்களை குறித்து இவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது ‘புன்னியவானாகிய நீங்கள், தனக்கு விருப்பமானதை தர்மம் செய்பவர் தனக்கு விருப்பமானதை பெற்றுக்கொள்வார்’ என்று கூறியுள்ளீர்கள். எனவே, எனக்கு பன்றியின் மாமிசம் மிகவும் விருப்பமானது. அதை நான் உங்களுக்கு தான தர்மம் செய்கிறேன்” என்றார். புத்தர் அவர் மீது கருணைக் கொண்டு அதை சாப்பிட்டுள்ளார் என்பதே அந்த சான்று.
புத்த பிக்குமார்கள் பத்து விதமான மாமிசங்களை உண்ணக் கூடாது என்று புத்த பெருமான் கட்டளையிட்டுள்ளார் என்பதை “මහා වග්ගපාළිය” மகா வக்கபாலி எனும் நூலில் காண முடிகிறது. அந்த பத்து மாமிசங்களாவன:
1.    மனிதனின் மாமிசம்
2.    குதிரையின் மாமிசம்
3.    பாம்பின் மாமிசம்
4.    நரியின் மாமிசம்
5.    கரடியின் மாமிசம்
6.    யாணையின் மாமிசம்
7.    நாயின் மாமிசம்
8.    சிங்கத்தின் மாமிசம்
9.    புலியின் மாமிசம்
10.    கழுதை புலியின் மாமிசம்
மேற்குறிப்பிட்ட பத்து வகையைச் சாராத மாமிசங்களை பிக்குமார்களுக்கே உண்பதற்கு புத்தர் அனுமதி வழங்கியிருக்கிறார். இவைகளும் தடைசெய்யப்பட்டமைக்கான காரணமும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்த ஓர் இடத்திலும் மிருக காருண்யம் இடம் பெறவில்லை.
எனவே, பிராணிகளை அறுக்கக் கூடாது என்பது புத்த மதத்தின் போதனையும் கிடையாது என்பதை புத்த மதத்தின் மத நூல்களை ஆய்வு செய்யும் போது மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சான்றுகள் அறியாமை இருளை களைவதற்கான ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இன்னும் பல சான்றுகள் நமது கைவசம் உள்ளன.
மேலும்ää பிராணிகளை அறுக்கக் கூடாது என்று சொல்பவர்கள் கூட தினசரி தம்மை அறிந்தோ அறியாமலோ பிராணிகளை சாகடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த 21ம் நூற்றாண்டில் கூட நர பலி கொடுப்பவர்களை பற்றி செய்தித் தாள்களில் படிக்கத்தான் செய்கிறோம்.
இலங்கை பௌத்த நாடு என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு இன்னொரு புறம் கொலை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என்று சட்டம் வைத்துள்ளார்கள். குற்றவியல் சட்டத்தை மாற்ற முடியாத இவர்களுக்கு எங்கள் மார்க்க சட்டத்தை மாற்ற எக்காரணத்தை கொண்டும் நாங்கள் இடமளிக்கக் கூடாது.
போயா தினத்தில் குர்பான் கொடுக்கக் கூடாது என்றால்ää அதற்குக் காரணம் பௌத்த மதம் என்றால் போயா அல்லாத நாட்களுக்கு அது பொருந்த வில்லையா? போயா அல்லாத நாட்களுக்கும் பொருந்தும் என்றால் இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சுää கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சு போன்ற அமைச்சுகளை இலங்கை அரசாங்கம் களைக்க வேண்டும். மது, சூது, களியாட்டங்கள் இன்னும் பல ஆன்மீகத்திற்கு எதிரான அனைத்துத் துறைகளையும் களைத்து விட்டு குர்பான் விடயத்தை கையில் எடுக்க வேண்டும். அப்போதும் குர்பான் சட்டம் அவர்களின் மதத்திற்கு எதிரானது அல்ல என்பதனால் அதை அமுல்படுத்தும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்கி மௌனமாக இருக்க வேண்டும்.
போயா தினத்தில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று இலங்கை சட்டம் சொல்கிறதா?
போயா தினத்தில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று இலங்கை சட்டம் சொல்கிறதா என்று பார்த்தால் சட்டம் தெளிவாகத் தடை விதித்துள்ளது. ஆனால்ää அந்த சட்டம் இஸ்லாத்திற்கும் குர்பான் சட்டத்திற்கும் எந்த வகையிலும் தடையாக அமையவில்லை என்பதே பேருண்மையாகும்.
விடுமுறை நாட்கள் குறித்து 1971ம் ஆண்டின் 29ம் இலக்கம் கொண்ட இலங்கையின் பாராளுமன்றச் சட்டம் ஒன்று இருக்கிது. அதில் போயா தினங்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்களின் விடுமுறைகள் குறித்து சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
PART II
OBSERVANCE OF FULL MOON POYA DAYS
Closure of certain establishments on Full Moon Poya Days    13.
(1) No person shall on any Full Moon. Poya Day keep open for business-
(a) any night club, dance hall or any place of public performance; or
(b) any arrack tavern, toddy tavern, foreign liquor shop, liquor bar, or any other premises where any liquor is kept for sale; or
(c) any place where betting on horse-racing or gambling of any description whatsoever is carried on; or
(d) any meat stall.
(2) The provisions of sub-section (1) shall have effect notwithstanding any other law or any terms or conditions of any licence or permit issued under any written law.
Prohibition of slaughter of animals.    14. No person shall, on any Full Moon Poya Day. slaughter any animal for the purpose of sale, or sell or offer for sale, the flesh of any animal.
Permission of certain public performances.    15. Not withstanding the provisions of section 13 it shall be lawful for a person to present any public performance if he obtains the prior written approval of the Minister in charge of the subject of Cultural Affairs,
மேற்குறிப்பிட்டுள்ள சட்டம் என்ன சொல்கிறதென்றால் “போயா தினங்களில் பிராணியின் மாமிசங்கள் விற்கும் நோக்கத்தில் அல்லது விற்பதற்காக விலை பேசும் நோக்கத்தில் எந்த ஒரு பிராணியையும் அறுக்கக் கூடாது” என்பதாகும். அப்படி ஒருவர் சமூகத்தின் பொது நலனுக்காக ஒரு பிராணியை அறுத்து விற்பதற்கு தேவை இருந்தால் அல்லது விற்பதற்கு விலை பேசுவதற்கு தேவை இருந்தால் மத கலாசார அமைச்சின் எழுத்திலான அங்கீகாரம் பெற்று பிராணிகளை அறுப்பற்கு இயலும் என்பதையும் இந்தச் சட்டம் விதிவிலக்களிக்கிறது.
நாம் உழ்ஹிய்யா குர்பான் கொடுப்பது மாமிசங்களை விற்று பிழைப்பு நடாத்துவதற்காக அல்ல. அது நமது மார்க்கக் கடமை. அந்த மாமிசங்களில் அல்லாஹ்விற்கும் எந்தத்தேவையும் கிடையாது. அந்த மாமிசங்களை நாம் ஏழைகளுக்கே விநியோகிக்கிறோம். எனவே, இலங்கை சட்டத்திற்கு நாம் எதிராக செயல்பட வில்லை என்று தெளிவுபடுத்த முஸ்லிம்கள் கடமைபட்டிருக்கறார்கள்.
இவ்வாறு தெளிவு படுத்தாமல் நமது மார்க்கக் கடமைகளை நாங்கள் விட்டுக் கொடுப்போமேயானால் நாம் முஸ்லிம்கள் என்று சொல்வதற்கோ, இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்வதற்கோ அருகதையற்றவர்கள் என்பதே உண்மையாகும்.
முடிவு:
எனவே, போயா தினங்களில் பிராணிகளை விற்கும் நோக்கத்தில் அறுக்கக் கூடாது என்று தான் சட்டம் சொல்கிறதே தவிர வியாபார நோக்கமின்றி, ஏழைகள் பயனடைய வேண்டும் என்பதற்காக உழ்ஹிய்யா – குர்பானி பிராணிகளை அறுப்பதனை இச்சட்டம் எந்த வகையிலும் தடுக்கப்படவில்லை. அவ்வாறு சட்;டத்தால் தடுத்தால் தடுக்கப்படுபவர்கள் அதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே தவிர எமது மார்க்க உரிமையை ஒருபோதும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

No comments:

Post a Comment