.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Wednesday, April 17, 2013

'வாயால் வீடு கட்டி ஒரு வாயில்லா ஜீவன் சாதனை..! (Photo Gallery)


பயங்கரவாதங்கள் நிறைந்த, பணம் சம்பாரிக்கும் பரபரப்பான இவ்வாழ்கையில் சில நேரங்களில் நம்மை சுற்றி இயல்பாக நடந்து கொண்டிருக்கும் எளியோரின் சில அதிசய சாதனைகள் நம் கண்டு கொள்ளலில் ஏனோ சிக்காமலேயே போய் விடுகின்றன..!

அப்படி  ஒன்றைத்தான் இங்கே புகைப்படங்களாக தந்துள்ளேன்.

வாருங்கள்..!

எளியோருக்கு அதரவு நல்கி, அவர்களின் உழைப்பை போற்றி  அன்போடு அரவணைப்போம்..!

மனிதம் நம்மில் தழைத்தோங்கட்டும்..!

நம்முடைய  எளிய சக 'Citizen of World'-ன் ஒரு சாதனை இப்பதிவில் படங்களுடன்.!





























சுபஹானல்லாஹ்..!

'இந்த வீட்டு ஓனர் தன் ஜன்னல் கண்ணாடியை திறப்பாரே...' என்ற பகுத்தறிவு சிறிதும் இல்லாமல் தவறுதலாக கூட்டை கட்டி விட்டது குருவி.

'ஜன்னலை திறப்பது எனது உரிமை... கூட்டை கட்டியது குருவியின் ஆக்கிரமிப்பு...' என்று வலியார் சட்டம் பேசி ஜன்னலை வலுக்கட்டாயமாய் திறந்தால்..?

கூடு கட்ட எடுக்கப்பட்ட குருவியின் கடும் முயற்சிகள் அனைத்தும் பாழ்.

உள்ளே  முட்டைகள் இட்டிருந்தால் அவை நொறுங்கி உடையும்.

ஒருவேளை குஞ்சு பொறித்து இருந்தால்...?

சின்னஞ்சிறு பறக்க இயலா பச்சிளம் குருவி குஞ்சுகள் கீழே விழுந்து இறக்கலாம்...! இல்லையெனில்... மேலே சுற்றும் வல்லூறுகளுக்கு இறையாகலாம்...!

குஞ்சுகள் இறக்கை முளைத்து, தானே வானில் பறக்கும் வரை... வலியார் கொஞ்ச காலம் அவகாசம் தந்து கதவை திறக்காமல் இருந்து பொறுக்கலாமே..!

எதற்கு வலியார் அத்துமீறும் எளியாரிடம் பொறுக்க வேண்டும்..?

ஏன் சட்டப்படி வலியார் நடக்காமல் இருக்க வேண்டும்..?

அப்படி இருந்தால் அதனால்... வலியாருக்கு என்ன இலாபம்..? என்ன இலாபம்..? 


நபி (ஸல்) அவர்கள் ''உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) 
நூல்: புகாரி 2363, 6009

No comments:

Post a Comment