.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Wednesday, February 13, 2013

இஸ்லாமிய சட்டமே தீர்வு!


இஸ்லாமிய சட்டம் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதனை காரைக்கால் சகோதரியின் அகால மரணம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 


பாதிக்கப்பட்டவனுக்கு தான் வலி தெரியும். இதனால் தான் மனிதனிக்கேற்ற மார்க்கமான இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் இடத்தில் நின்று பார்க்க சொல்கிறது.


பாதிக்கப்பட்ட சகோதரி வினோதினியின் தந்தை இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கூடாது அப்படி வழங்கினால் அவன் ஒரே நிமிடத்தில் செத்துடுவான், எனது மகள் எப்படி வேதனைப்பட்டாளோ அதே போல் வேதனைப்பட்டு அவன் சாக வேண்டும் என அவர் வேதனையுடன் குறிப்பிட்டது பலருக்கும் சிந்தனையை தூண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.



சமீபத்திய டெல்லி கற்பழிப்பில் மரணமடைந்த மாணவியின் தந்தையும் அனைத்து குற்றவாளிகளுக்கும் மைனட் மேஜர் என்று பார்க்காமல் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று தான் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சொல்வார்.

அதே நேரம் பாதிக்கப்பட்டவர் மன்னிப்பார் எனில் குற்றவாளி எவ்வித தண்டனையும் இல்லாமல் விடுதலையை வழங்கவும் இஸ்லாம் சொல்கிறது. 

இத்தகைய உன்னதமான சட்டத்தை இஸ்லாத்தை தவிர வேறு எந்த சித்தாந்தமோ, நாடோ வழங்கவில்லை என்பது தான் சிறப்பு. இச்சிறப்புக்கு காரணம் இச்சட்டத்தை வழங்கியது இவ்வுலகை படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஆகும்.

இஸ்லாம் குறித்து மேலதிக தகவல்களை பெற விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment