.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Saturday, November 3, 2012

இறுதித் தூதரின் ஹஜ் பேருரை


அழகிய படைப்பாளனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ் கூறுகிறான்: இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன்: 5:3)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஹஜ்ஜூக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்கு தெரியாது என்றார்கள். (ஜாபிர்(ரலி) முஸ்லிம் 2286)

உலகில் பிறந்த மனிதர்களில் போற்றுதலுக்குண்டான தலைவர்கள் எத்தனையோ பேர் தோன்றியுள்ளனர். பல்வேறுபட்ட துறைகளில் அவர்கள் செய்த சாதனைகள் மனித இனத்துக்குப் பயனளிப்பவைகளாக இருந்துள்ளன இருந்தும் வருகின்றன. ஆனால் அவைகளெல்லாம் குறிப்பிட்ட ஒரு துறையினருக்கோ, குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கோ அல்லது குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தினருக்கோ மட்டுமே பயன்தருபவையாக இருந்திருக்கிறது.


கால ஓட்டத்தில் கருத்துக்களும் சிந்தனைகளும் மேலோங்க நவீன கண்டுபிடிப்புகள் கடந்த காலத்தை திரையிட்டு மறைத்து விடுகிறது. மிகப்பெரும் தலைவர்கள் காட்டிச்சென்ற பாதைகளெல்லாம் அறியாமைக் கோலத்தில் பல்;லிளிப்பதை பார்க்கின்றோம்.


நிகழ்காலத் தேவைகள் அதிகமாகும்போது மனிதன் கடந்த காலத்தைப்பற்றி கவனம் கொள்வதுமில்லை. உலக வாழ்வையும் இறைவணக்கத்தையும் வௌ;வேறாக ஆக்கிக் கொண்டு காலவெள்ளத்தில் காணாமல் போகின்ற மனிதனின் கரம் பிடித்து அவனது உலக வாழ்வை இறைவணக்கத்தின் அடிப்படையில் அமைத்து, மறுமை வாழ்வையும் இறைதிருப் பொருத்தத்தையும் பெற்றிட சத்திய சன்மார்க்கம் அழைக்கிறது.

அந்த ஏக இறைவனின் தூதுச் செய்தியை எடுத்துச் சொன்ன ஏந்தல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையும், இறுதிப்பேருரையும் இன்றளவும் இனி உலகம் உள்ளளவும் மனித இனத்துக்கு நன்மை பயப்பதாக இருக்கிறது. அவற்றை காலவெள்ளம் காணடிப்பதில்லை.

மாறாக இறைத்தூதரின் வழிமுறைகள் காலங்களை வென்றதாக உள்ளது.நவீன கண்டுபிடிப்புகளும்,புதிய சித்தாந்தங்களும் அம்மாமனிதரின் சொல் செயல் அங்கிகாரங்களை திரையிட்டு மறைக்க முடியவில்லை. இதோ இப்பொழுதும் அந்த மாநபியின் உபதேசங்கள் மனிதர்களில் தேவைகளாகவும் வசந்தமாகவும் இருப்பதை  உணரலாம். குறிப்பிட்ட சிலருக்கென்னு இல்லாமல் எல்லாக் காலத்தினருக்கும் பயன்தருபவைகளாக இருப்பதை நாம் அறியலாம்.அண்ணல்நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் பேருரையிலிருந்து முத்துக்களைத் தந்திருக்கின்றோம். அல்லாஹ் தான் நேர்வழி காட்டுபவனும் அதில் வழிநடத்திச் செல்லும் கருணையாளனுமாவான்.

அல்லாஹ்வின் தூதர்(லல்) அவர்கள் இருபத்து மூன்று ஆண்டு காலத்தில் ஆற்றிய தூதுப் பணியின் மொத்தத் தொகுப்பை தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பயணத்தில் சத்தாக சாறு பிழிந்து தந்தார்கள். அதனால் அது வரலாற்றில் முக்கிய இடத்தைப்பிடித்தது.

நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவிர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனின் தூதரும் தான் நன்கறிவார்கள்.அதற்கவர்கள்,இது புனிதமிக்க தினமாகும்.

இது எந்த நகரம் என்பதை நீஙகள் அறிவீர்களா? என்ற கேட்க மக்கள் அல்லாஹ்வும் தூதரும் நன்கறிவர்! என்றனர். அவர்கள் (இது) புனித நகரமாகும். பிறகு நபி(ஸல்) அவர்கள் இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா? என்றதும் மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர். அதற்கு  நபி(ஸல்)அவர்கள் இது புனித மாதமாகும். பிறகு உங்களுடைய இந்தப் புனித நகரத்தில்,உங்களுடைய இந்த புனித மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான் எனக் கூறினார்கள். 

மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு இது மிகப் பெரிய ஹஜ்ஜின் தினமாகும் என்று கூறினார்கள். மேலும், இறைவா! நீயே சாட்சி என்று கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே மக்களும் இது (நபியவர்கள் உலகை விட்டு) விடை பெற்றுச் செல்கின்ற ஹஜ்ஜாகும் என்ற பேசிக் கொண்டார்கள்.(இப்னு உமர்(ரலி) புகாரி 1742)

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஒரு அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும் ஒரு சிவப்பருக்கு கருப்பரை விடவும் எந்த சிறப்பும் இ;ல்லை. இறையச்சத்தை விட(அஹ்மத் 22391)

உங்களுடைய இறைவனை அஞ்சுங்கள். உங்கள் ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுங்கள். உங்கள் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பொருட்களில் ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் உடையவருக்கு கட்டுப்படுங்கள். உங்களது இறைவனின் சுவனத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள். (திர்மிதி; 559, அஹ்மத் 21140, ஹாகிம் 19 பைஹகி)

அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காதீர்கள். அல்லாஹ் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றி கொலை செய்யாதீhகள். திருடாதீர்கள். விபச்சாரம் செய்யாதீர்கள். (அஹ்மத் 18219, ஹாகம் 8033, பைஹகி 15620)

 ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்.(ஹாகிம் 318)
  மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அபயம் அளிpப்பவரே முஃமின் (பஸ்ஸார் 2435,இப்னு ஹிப்பான் 4862)

எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார் (பஸ்ஸார் 2435, தப்ரானி 3444)

அறிந்துக் கொள்ளுங்கள்! உங்களது இந்த நகரத்தில் உங்களது இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான் என்று கூறி விட்டு, நான் (இறைச் செய்தியை) உங்களிடம் சேர்த்து விட்டேனா? என்று கேட்டார்கள். மக்கள் ஆம் என்று பதிலளித்தளர்.

இறைவா! நீ சாட்சியாக இரு!!என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ! அல்லது அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிக் கொள்ளும் இறைநிராகரிப்பாளராய் மாறி விடாதிர்கள். (புகாரி 4402)

மனமுவந்து தராத தன் சகோதரனின் பொருள் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது கிடையாது. (அம்ப்  பிpன்அல் அஹ்வல் (தர்மிதி( 3012) ஹாகிம்(318)

அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ எனறு கூறுமளவுக்கு அண்டை வீட்டுக்காரனை பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக வலியுறுத்தினாhக்ள். (தவ்ரானி 7523)

தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கின்றான். தந்தை செய்யும் குற்றத்திற்கு மகன் பொறுப்பாளியாக மாட்டான். மகன் செய்யும் குற்றத்திற்கு தந்தை பொறுப்பாளியாக மாட்டார். (திர்மிதி 2085, இப்னு மாஜா 3659)

அறியாமை அகலட்டும். அறியாமைக்காலத்து அனைத்து காரியங்களும்  என் இரு பாதங்களுக்கிடையில் போட்டு புதைக்கப்படுகின்றன.(முஸ்லிம் 2137)

அறியாமைக் காலத்துக் (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் ரத்துச் செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதல் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தை ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆத் அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹதல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரையில் பழி தீர்க்கப்படமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது. (ஜாபிர்(ரலி) முஸ்லிம் 2137, திர்மிதி 3012, அபூதாவுத் 1628, 2896ஈ இப்னுமாஜா 3046, 3065, இப்னு குஸைமா   அறியாமைக் காலத்து வட்டி ரத்து செய்யப்படுகின்றது.

முதன் முதல் நான் ரத்து செய்யும் வட்டி அப்பாசுக்கு   வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. (முஸ்லிம்237, திர்மித் 3012இ அபுதாவுத் 1628, 2896 இப்னுமாஜா)

இரவல் (திருப்பி)  செலுத்தப்பட வேண்டியதாகும். கடனுக்கு பொறுப்பேற்றவனும் கடனாளியே (திர்மிதி 1186 அபுதாவுத் 1628,2896)

யாருக்கு குழந்தை பிறக்கின்றதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபச்சாரம் செய்தவருக்கு இழப்பு தான். அவர்களின் விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது. தன் தந்தை அல்லாதவரை தந்தை என்று குறிப்பிடுபவர் தன் எஜமான் அல்லாதவருடன் தன்னை இணைத்துக் கொள்பவர் ஆகியோர் மீது இறுதி நாள்வரை தொடரும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! (அபூ உமாமா  திர்மிதி 2046)

சொத்துரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது சொத்துரிமையை அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே சொத்துரிமை பெறுபவருக்கு இனி மரண சாசனம் இல்லை. (அனஸ் (ரலி) இப்னமாஜா 2705) 

பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாக பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கிறீர்கள்.

நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும்,உடையும் உங்கள் மனவியருக்கு வழங்க வேண்டும் இது நீங்கள் உங்கள் மனைவியருக்கு செலுத்த வேண்டிய கடமையாகும். (முஸ்லிம் 2137)

பெண்களிடம் நன்மைகளை போதியுங்கள்.அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக இருக்கிறார்கள். இதைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாக பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேட்டை செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள். காயமின்றி அடியுங்கள், அவர்கள் கட்டுப்பட்டுவிட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள். நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு.  

உங்கள் மனைவியர் உங்களுக்கு  நிறைவேற்ற கடமைகள் நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து விடக்கூடாது. 
உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக் கூடாது. அறிந்துக் கொள்ளுங்கள்! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும் உணவிலும் தாராளமான முறையில் நடந்துக் கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்கு செய்யும் கடமையாகும். (திர்மிதி 1083, 3102, இப்னுமாஜா 1841)

கணவனின் அனுமதியின்றி தன் கணவன் வீட்டில் எதையும் ஒரு பெண் செலவு செய்யக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உணவும் அப்படி தானா? என்ற கேட்கப்பட்ட போது, அதுதான் பொருட்களில் மிகச் சிறந்தது என்று பதிலளித்தார்கள். (அபுஉமாமாஅல் பாஹிலி (ரலி) திர்மதி 606

அறிந்து கொள்ளுங்கள்! உங்களுடைய இந்த ஊர்களில் ஒரு போதும், தான் வணங்கப்பட மாட்டோம் என்று ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும் நீங்கள் கேவலமாக கருதும் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு உருவாகும். அதன் மூலம் அவன் திருப்தி யடைவான். (அம்ர் பின் அல்அஹ்வால் 9திர்மிதி 2085)

என்னுடைய உயிர் யாருடைய கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! இது அவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும். (இப்னு உமர் (ரலி) புகாரி 4402)

ஒன்றை நான் உங்களிடம் விடுகின்றேன். அதைப் பற்றி பிடிக்கின்றவரை ஒருபோதும் நீங்கள் வழிகெட மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும், அவனது நபியின் வழிமுறையுமாகும் (ஹாகிம் 318 பாகம் 1 பக்கம் 171)

இங்கு வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியை எடுத்துக் கூறி விட வேண்டும். ஏனெனில் வருகை தந்திருப்பவர் தன்னை விட நன்கு புரிந்துக் கொள்ளும் ஒருவருக்கு அந்தச் செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுபக்ரா(ரலி) புகாரி 67

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து தஜ்ஜாலைப் பற்றி கூறத் தொடங்கினார்கள். நீண்ட நேரம் அவனைப் பற்றி கூறினார்கள். அப்போது அல்லாஹ் அனுப்பி எந்த இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள்.அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத் தூதர்களும் எச்சரித்தனர் மேலும் உங்களிடையே தான் அவன் தோன்றுவான். அவனது தன்மைகளில் ஏதேனும் உங்களுக்கு புலப்படாமல் போனாலும் நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்கு தெரியாதவன் அல்லன். இதை மூன்று முறை கூறினார்கள். உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணண் அல்லன். ஆனால் தஜ்ஜால் அவனோ வலது கண் குருடானவன்.அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும். திராட்சை  போன்று இருக்கும் என்று கூறினார்கள்.(இப்னு உமர்(ரலி)புகாரி 4402)

No comments:

Post a Comment