.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Sunday, October 28, 2012


முஸ்லீம் தனியார் சட்டத்தில் கைவைக்கும் அயோக்கியத்தனம்!‎ ஆர்ப்பரித்து எழுந்தது டிஎன்டிஜே!!‎

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, July 4, 2012, 21:42
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அரும்பாவூர் என்ற குக்கிராமம். இந்த ‎ஊர் பெரம்பலூரிலிருந்து 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரில் வசித்து ‎வரும் சாகுல் ஹமீது என்ற மணமகனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த யுரேஷா பானு ‎என்ற மணமகளுக்கும் கடந்த 25.06.12 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ‎அங்குள்ள கோகுல் திருமண மண்டபத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் ‎முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது.‎
திருமண தினத்தன்று காலை 10.20 மணியளவில் ஆர்.டி.ஓ பேச்சியம்மாள் ‎தலைமையில் மண்டபத்தினுள் புகுந்த காவல்துறையினர் திருமணத்தைத் தடுத்து ‎நிறுத்தி மணமகன், மணமகள், மணமகனின் பெற்றோர்கள், மணமகளின் ‎பெற்றோர்கள் ஆகியோரை அழைத்துச் சென்றனர்.‎

ஏன் திருமணத்தை நிறுத்துகின்றீர்கள் என்று காரணம் கேட்டதற்கு சமூக ‎நலத்துறையிலிருந்து புகார் வந்துள்ளது. நீங்கள் நடத்தும் இந்தத் திருமணம் ‎குழந்தைத் திருமணம் ஆகும். மணமகளுக்கு 16 வயதுதான் ஆகின்றது. இது இந்திய ‎அரசியல் அமைப்பு சாசனச் சட்டப்படி குற்றம். எனவே உங்களைக் கைது ‎செய்கின்றோம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.‎

மேலும், இது மாவட்ட கலக்டருடைய உத்தரவு. மாவட்ட கலக்டர் இதற்கு முன்பு ‎இது போன்ற சட்டத்துக்கு முரணாக நடத்தப்பட்ட 99 குழந்தைத் திருமணங்களைத் ‎தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் தடுத்து நிறுத்தும் 100வது திருமணம் என்று ‎பீற்றிச் சென்றுள்ளனர்.‎

மணமகன் வீட்டினரும், மணமகள் வீட்டினரும் இணைந்து பரிபூரண சம்மதத்துடன் ‎நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் இவர்களாக மூக்கை நுழைத்து, “மணமகளுக்கு 16 ‎வயதுதான் ஆகின்றது; எனவே இது குழந்தைத் திருமணம்” என்று சட்டம் பேசி, ‎இந்தத் திருமணத்தை அநியாயமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.‎

இந்த அக்கிரமத்தைச் செய்த காவல்துறையினருக்கும், இந்த ஆர்.டி.ஓ.விற்கும், ‎மெத்தப்படித்த மேதாவியாக உள்ள கலெக்டருக்கும் முஸ்லிம்களுக்கென்று ‎இந்தியத் திருநாட்டில் தனியாக, “முஸ்லிம் பெர்சனல் லா” (முஸ்லிம் தனியார் ‎சட்டம்) என்று ஒன்று உள்ளது என்பது தெரியாதா? இது கூடத் தெரியாமலா இந்தக் ‎கூமுட்டைகள் பதவியில் அமர்ந்தார்கள். அதிலும் இந்தக் கைது உத்தரவை ‎பிறப்பித்த மாவட்டக் கலெக்டர், “தரேஸ் அஹ்மது” என்பவர் ஒரு முஸ்லிம் ‎என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடிய ‎கலக்டருக்கே முஸ்லிம்களுக்கு தனியாக சட்டம் இருப்பது தெரியவில்லை ‎என்றால் இவர் உண்மையாகவே கலெக்டருக்கு படித்து இந்த பொறுப்பில் வந்தாரா? ‎அல்லது கள்ளத்தனம் செய்து கொல்லைப் புறமாக இந்தப் பொறுப்பிற்கு வந்தாரா? ‎என்று தெரியவில்லை.‎
களமிறங்கிய டிஎன்டிஜே :‎

மணமகன், மணமகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அழைத்துச் ‎செல்லப்பட்டவுடனேயே பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுன்னத்வல் ‎ஜமாஅத்தினராக இருந்த போதிலும், இந்த விஷயத்தில் நியாயம் கேட்டு நமது ‎உரிமையைப் பெற்றுத்தர ஏற்ற இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துதான். ‎அவர்களிடத்தில் சென்றால்தான் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பதை ‎உணர்ந்து அவர்கள் உடனடியாக டிஎன்டிஜே வின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ‎அஷ்ரப் அலி அவர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களைக் கூறி ‎முறையிட்டுள்ளனர்.
அதிரடியாக களத்தில் இறங்கிய மாவட்டத் தலைவர் அஷ்ரப் ‎அலி மற்றும் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் அசாருதீன் ஆகியோர் ‎உடனடியாக கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர், ஆர்.டி.ஓ மற்றும் ‎காவல்துறையின் இந்த அநியாயத்தையும், அடாவடித்தனத்தையும் ‎தட்டிக்கேட்டுள்ளனர்.‎

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, “15 வயது நிரம்பிய முஸ்லிம் பெண்கள் ‎தாங்கள் விரும்பியவரைத் திருமணம் முடிக்கலாம். அதற்கு முஸ்லிம் தனியார் ‎சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‎அடிப்படையில் தவறில்லை” என்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் ‎சுட்டிக்காட்டி நமது உணர்வு இதழில் வெளியான செய்தியை அவர்களிடத்தில் ‎காண்பித்து, சட்டப்படி நடைபெறும் ஒரு திருமணத்தை, பெண் வீட்டார் மற்றும் ‎பெண்ணின் சம்மதத்துடன் நடைபெறும் இந்தத் திருமணத்தை தாங்கள் தடுத்து ‎நிறுத்தியிருப்பது முஸ்லிம்களின் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ‎ஏற்படுத்தியுள்ளது என்றும், முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் தலையிட்டு ‎எங்களது உரிமைகளைப் பறித்துள்ள இந்தச் செயலை நாங்கள் சாதாரணமாக ‎எடுத்துக் கொள்ள மாட்டோம்; இந்த அடாவடித்தனத்தைச் செய்த அதிகாரிகளை ‎சும்மா விடமாட்டோம். இதில் தாங்கள் எடுத்த நடவடிக்கையை திரும்பப் ‎பெறவில்லையானால் இது தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய ‎பிரச்சனையாகும் என்ற எச்சரிக்கையையும் நமது நிர்வாகிகள் கலெக்டர் ‎அலுவலகத்தில், விடுத்துள்ளனர்.‎
‎ நமது நிர்வாகிகள் கூறிய செய்திகளையும், உணர்வு இதழையும் பார்த்த ‎அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. கதிகலங்கிய அதிகாரவர்க்கம் ‎மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது பெற்றோர்கள் அனைவரையும் ‎விடுவித்தனர். அவர்கள் மீது எந்த வழக்குகளும் போடாமல் நாங்கள் திருப்பி ‎அனுப்பி விடுகின்றோம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.‎

அதற்கிடையில், 100வது திருமணத்தை நிறுத்தி சதமடிக்கும் கலெக்டரின் ‎சாதனையை தவ்ஹீத் ஜமாஅத் முறியடித்து விட்டால், மாவட்ட கலெக்டரின் ‎பிரஸ்டீஜ் என்னவாகுமோ என்று பதறிய அவர்கள் மணமகன் மீது எஃப்.ஐ.ஆர் ‎பதிவு செய்து, மணப்பெண்ணை திருச்சியிலுள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு ‎அனுப்பி வைத்து விட்டதாக தகவல் சொல்லியுள்ளனர்.‎

இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடத்தில், முஸ்லிம் பெண்கள் ‎பருவமடைந்து விட்டாலே திருமணம் முடிக்கலாம் என்று முஸ்லிம்களுக்கு என்று ‎தனிச்சட்டம் உள்ளது. அந்த அடிப்படையில்தான் 15 வயது நிரம்பிய ஒரு ‎பெண்ணுக்கு திருமணம் முடித்தது செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி டெல்லி ‎உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட போது, 15 வயது நிரம்பிய முஸ்லிம் ‎பெண் அவர் விரும்பியவரை மணமுடிக்கலாம் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்ற ‎நீதிபதிகள் வழங்கியுள்ளனர் என்று நமது நிர்வாகிகள் கூறியதற்கு, அந்த ஊரிலுள்ள ‎காவல்துறை ஆய்வாளரும், டி.எஸ்.பி.யும், “அந்தத் தீர்ப்பு டெல்லிக்குத்தான் ‎செல்லுபடியாகும். தமிழகத்தை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தாது. தமிழகத்திலுள்ள ‎உயர்நீதிமன்றத்தில் இது போன்ற தீர்ப்பு கொடுத்தால்தான் அது தமிழகத்தைக் ‎கட்டுப் படுத்தும்” என்று கூறுகெட்டத் தனமாக கூறியுள்ளனர்.‎

உடனே நமது நிர்வாகிகள் அதிகாரிகளிடத்தில், “நீங்கள் கூறுவதை ‎எழுத்துப்பூர்வமாக எழுதித் தாருங்கள். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை ‎நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியதும், அதை எல்லாம் எழுதித்தர ‎முடியாது என்று மழுப்பிவிட்டனர்.‎

இந்தியாவில் முஸ்லிம்களுக்கென்று தனிச்சட்டம் உள்ளது என்ற அடிப்படை ‎அறிவும் இவர்களுக்கு இல்லை; இந்தியாவிலுள்ள ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள ‎உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இந்தியா முழுவதையும் கட்டுப்படுத்தும்; ‎அதற்குக் கீழுள்ள கோர்ட்டுகளையும் கட்டுப்படுத்தும். அந்தத் தீர்ப்புகளும் சட்ட ‎அங்கீகாரத்திற்குள் வந்துவிடும்” என்ற அடிப்படை அறிவும் கூட இவர்களுக்கு ‎இல்லை என்பது எப்படிப்பட்ட கூறுகெட்ட மூளையற்றவர்க ளெல்லாம் ‎அதிகாரமட்டத்தில் இருக்கின்றார்கள் என்பதற்கு நல்ல சான்று.‎

இவ்வளவுக்கும் பிறகு நமது நிர்வாகிகளிடத்தில் அந்த மூளை வெந்த அதிகாரிகள் ‎அப்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருக்குமேயானால் அதனுடைய நகலை ‎எங்களுக்குக் கொடுங்கள் என்று கூறி அசடு வழிந்துள்ளனர்.‎
இப்படிப்பட்ட அதிகாரிகள் இருந்தால் கூடிய விரைவில்(?) இந்தியா ‎வல்லரசாகிவிடும் :‎

டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு தமிழகத்தைக் கட்டுப்படுத்தாது என்று ‎கூறிய பிறகு ஏன் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை நம்மிடம் கேட்க ‎வேண்டும். அது மட்டுமல்லாமல், டெல்லி உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு ‎கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து மீடியாக்களிலும் பரவலாக பரபரப்பாக ‎பேசப்பட்டது. அனைத்து முன்னணி செய்தி தொலைக் காட்சிகளும், பத்திரிக் ‎கைகளும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் இவர்களுக்கு நாட்டு ‎நடப்பும் தெரியவில்லை என்பது பளிச்சென்று தெரியவருகின்றது. இந்த ‎லட்சணத்தில்தான் கலெக்டரும், ஆர்.டி.ஓ.வும், சமூக நலத்துறையும், காவல்துறை ‎அதிகாரிகளும் உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது கூடிய விரைவில் இந்தியா ‎வல்லரசாகிவிடும் என்ற நம்பிக்கை(?) நமக்கு வலுப் பெறுகின்றது.‎

அவர்கள் அந்தத் தீர்ப்பின் நகல் நம்மிடம் இருக்காது என்று நினைத்தார்களோ ‎என்னவோ நமக்குத் தெரியவில்லை. இப்படித் தீர்ப்பு நகல் நம்மிடம் இல்லை ‎என்றால் அதை வைத்தே காய் நகர்த்தலாம் என்ற சதித்திடமாகத்தான் இது ‎இருக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். இல்லையென்றால் தீர்ப்பின் நகலை ‎நம்மிடம் கேட்க எந்த அவசியமும் இல்லை.‎

அவர்கள் கேட்ட மறுகணமே மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகத்தைத் ‎தொடர்பு கொண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு நகலைக் ‎கேட்டவுடனேயே, தயாராக வைத்திருந்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு ‎நகல் மாவட்டத்திற்கு மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட, அதை நமது மாவட்ட ‎நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ‎அனைவரிடத்திலும் வழங்க, நாம்தான் தவறான வேலையை செய்துவிட்டோமோ ‎என்று அவர்களுக்கு அப்போதுதான் பொரி தட்டியுள்ளது.‎

(குறிப்பு : டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு நமது ஜமாஅத்தின் இணையதளத்தில் ‎வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.)‎
ஆர்ப்பாட்டம் அறிவித்தது டிஎன்டிஜே:‎

முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைத்து முஸ்லிம்களின் ‎உரிமையைப் பறித்து, அடாவடித்தனம் செய்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக ‎பதவி நீக்கம் செய்யச் சொல்லியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை ‎எடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மறுநாள் 26.06.12 ‎செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணிக்கு நடத்தவுள்ளதாக அன்றைய தினமே ‎‎(25.06.12 அன்று) பெரம்பலூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அறிவிப்பு ‎செய்யப்பட்டது.‎

இவர்களிடத்தில் முறையாக அனுமதி கேட்டாலும் இவர்கள் தரப்போவதில்லை ‎என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகிகள் காவல்துறையிடம் எந்த அனுமதியும் ‎பெறாமலேயே இந்தப் போராட்டத்தை அறிவித்தனர்.‎

பெரம்பலூர் மாவட்டம் என்பது மிகவும் பின் தங்கிய மாவட்டமாகும். இங்கு ‎ஏகத்துவ ஆதரவாளர்கள் மிக மிகக் குறைவு என்ற போதிலும், இந்த ‎அநியாயத்திற்கு எதிராக நாம் களம் கண்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ‎அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து நமது சகோதரர்கள் ‎அதிகாரவர்க்கத்தைக் கண்டித்து இந்த அறவழிப்போராட்டத்தில் குதித்தனர்.‎
மிரட்டல் விடுத்த காவல்துறை :‎

காவல்துறையையும், மாவட்ட கலெக்டரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் ‎நடத்தினால் சும்மா விடுவார்களா என்ன? ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த 26.06.12 ‎அன்று காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆய்வாளரும், ‎டி.எஸ்.பி.யும் நமது மாவட்டத் தலைவரிடத்தில், “தடையை மீறி ஆர்ப்பாட்டம் ‎நடத்தினால் உங்களைக் கைது செய்து சிறையிலடைப்போம். இது வரை 99 ‎திருமணங்களை, அதுவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் ‎முடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம். அவர்களெல்லாம் இது போன்று ‎ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. அவர்களெல்லாம் இந்துக்களைத் திரட்டி எங்களுக்கு ‎எதிராக போராட்டம் நடத்தவில்லை. உங்களுக்கு மட்டும் என்ன வந்துவிட்டது. ‎நீங்கள் முஸ்லிம்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போகின்றீர்களா?‎

இந்த போரட்டத்தில் என்ன 1000 பேர் வருவீர்களா? அல்லது 2000 பேர் ‎வருவீர்களா? இல்லை 3000 பேர் வருவீர்களா? எவ்வளவு பேர் வந்தாலும் ‎விடமாட்டோம்” என்று மிரட்டியுள்ளார்.‎

இவர்கள் காட்டிய பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படாத நமது டிஎன்டிஜே ‎நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளிடத்தில், “இதுவரை நீங்கள் 99 ‎திருமணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அதுவெல்லாம் இந்துக்களுடைய ‎திருமணம். அவர்கள் 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் முடிப்பது இந்திய ‎அரசியலமைப்புச் சட்டப்படி குற்றம். ஆனால் நாங்கள் முஸ்லிம்கள். ‎எங்களுக்கென்று இந்த நாட்டிலுள்ள உரிமைகளை நாங்கள் விட்டுத்தர மாட்டோம். ‎விட்டுத்தரவும் முடியாது. நீங்கள் என்ன இதைத் தடுப்பது?. நாங்கள் என்ன ‎உங்களிடம் அனுமதி வாங்குவது?. நாங்கள் தடையை மீறித்தான் இந்த ‎போரட்டத்தை நடத்துகின்றோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் ‎செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூற ‎பரபரப்பு ஏற்பட்டது.‎

அதற்கு பதிலளித்த மெத்தப்படித்த மேதாவிகள், இதில் இந்து முஸ்லிம் ‎என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. உயிர் என்பது அனைவருக்கும் ‎ஒன்றுதான். அதுபோல 18 வயதில் மணம் முடிக்கக் கூடாது என்ற சட்டம் ‎அனைவருக்கும் ஒன்றுதான்” என்று கூறி வரட்டுத்தத்துவம் பேசியுள்ளனர்.‎

கலெக்டரை நேரடியாகச் சந்தித்து இது குறித்து விளக்கமளிக்க அனுமதி கேட்ட ‎போது, இந்தப் பிரச்சனை குறித்து அவர் ஆலோசனை செய்து கொண்டுள்ளார் என்று ‎கூறியுள்ளனர். அப்படியானால் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு பிறகுதான் ‎அவர் செய்த செயல் சரியானது தானா? என்று அவர் ஆய்வு செய்தது ‎அம்பலமானது. ஒரு கலெக்டர் என்பவர் இந்த அளவுக்கா கூறுகெட்டுப்போய் மரை ‎கழன்று திரிகின்றார் என்ற விஷயமும் உறுதியானது.‎
பேரணியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்:‎
பெரம்பலூர் பழைய பஸ்டாண்ட் அருகிலுள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு சரியாக ‎மாலை 4மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.‎

அதற்கு முன்பாகவே எப்படியாவது மிரட்டிப்பார்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து ‎நிறுத்திவிடலாம் என்று மிரட்டல் விடுத்த காவல்துறையின் பாச்சா ‎டிஎன்டிஜேவிடம் பழிக்கவில்லை. இருந்தபோதிலும் காவல்துறையினர் விடுவதாக ‎இல்லை.‎
போலீஸ் படையைக் குவித்து மிரட்டல்:‎

ஆர்ப்பாட்ட இடத்தில் போலீஸ் படையை குவித்தனர். ஆர்ப்பாட்ட இடத்தை ‎நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். ‎மேலும், ஆர்ப்பாட்டத்திற்காக நமது நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வைத்திருந்த ‎ஆம்ப்ளிஃபைர் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ், மற்றும் மைக் செட் ஆகியவற்றை ‎பறிமுதல் செய்து பூச்சாண்டி காட்டியுள்ளனர்.‎

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திலிருந்த இவற்றை பறிமுதல் செய்த ‎விஷயத்தை நமது நிர்வாகிகளிடம் தொலைபேசியில் தெரியப்படுத்தியவரை ‎மிரட்டியுள்ளனர். இவ்வளவு அடக்குமுறைகளுக்குப் பிறகும் ஏராளமான மக்கள் ‎இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக ஆர்ப்பரித்தவுடன் காவல்துறையினர் ‎செய்வதறியாது தவித்தனர்.‎

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைவரையும் பெரம்பலூர் தவ்ஹீத் ஜமாஅத்தின் ‎மர்கஸுக்கு வரவழைத்து அங்கிருந்து ஒரு பிரம்மாண்டமான பேரணியாக இந்தப் ‎போராட்டம் மாலை 4.45மணிக்கு அஸர் தொழுகைக்கு பிறகு ஆரம்பமானது.‎

நமது டிஎன்டிஜே மர்கஸிலிருந்து போரட்டக் களம் நோக்கி சாரை சாரையாக ‎வெளியேறிய மக்கள் வெள்ளத்தை நோக்கி காவல்துறையினர் ஓடி வர, டென்சன் ‎எகிறியது.‎

அனுமதியின்றி தடையை மீறி பேரணி செல்லக்கூடிய நம்மை கைது ‎செய்யத்தான் பேரணி செல்லக் கூடியவர்களை நோக்கி காவல்துறையினர் ஓடி ‎வருகின் றார்கள் என்று நினைத்து கைதாவதற்கு நமது மக்கள் தயாராக இருக்க, ‎ஓடி வந்த காவல்துறையினர் நமது பிரம்மாண்ட பேரணி பெரம்பலூர் பழைய ‎பேருந்து நிலையம் அருகிலுள்ள போராட்ட ஸ்பாட்டிற்கு செல்வதற்கு பாதுகாப்பு ‎வழங்கியதுதான் உச்சகட்ட பரபரப்பு.‎

கைது செய்ய வருகின்றார்கள் என்று பார்த்தால் பாதுகாப்பு தருவதற்கல்லவா? ‎வந்துள்ளார்கள் என்று ஆச்சரியத்துடன் ஆர்ப்பாட்டக் களம் நோக்கி விரைந்தது ‎தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரர்படை.‎

முந்தைய தினம் 25.06.12 திங்கட்கிழமை அன்றுதான் இந்தப் போராட்டத்திற்கு ‎அழைப்பு விடுக்கப்பட்டது. மறுநாள் 26.06.12 செவ்வாய்கிழமை மாலை 4மணிக்கு ‎போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு செய்யப்பட்டு முழுமையாக 24 மணி நேர ‎அவகாசம் கூட இல்லாத நிலையில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் ‎லெப்பைக்குடிகாடு, புதுஆத்தூர், வி.களத்தூர் என்று பெரம்பலூர் மாவட்டத்தின் பல ‎பகுதியிலிருந்தும் கொள்கைச் சொந்தங்கள் காட்டாற்று வெள்ளம் போல ‎திரண்டதால் பெரம்பலூர் காவல்துறை செய்வதறியாமல் திகைத்தனர்.‎

விண்ணை முட்டும் கோஷங்களுடன் குறித்த நேரத்தில் போராட்டம் ‎ஆரம்பமானது. காவல்துறை மற்றும் அடாவடி கலெக்டரைக் கண்டித்து கோஷங்கள் ‎எழுப்பப்பட்டன. மாநில நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பேச்சாளர் ‎தாவூத் கைசர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக கண்டன ‎உரையாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள், மைக்செட், ‎ஆம்ப்ளிஃபைர் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்துவிட்ட காரணத்தால் ‎இதை ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்திருந்த நமது நிர்வாகிகள் தயாராக மெகா ‎ஃபோன்களை வைத்திருந்தனர். அந்த மெகா ஃபோன் வாயிலாக கோஷங்களும், ‎கண்டன உரையும் நிகழ்த்தப்பட்டன.‎

இதைக்கண்ட போலீஸார் “இவர்கள் எதற்கும் தயாராகத்தான் வந்துள்ளார்கள்” ‎என்பதை சூசகமாக உணர்ந்து கொண்டார்கள். ‎
அரசியலமைப்புச் சட்டம் குறித்து அதிகாரிகளுக்கு பாடம் நடத்திய டிஎன்டிஜே:‎

தாவூத் கைசர் அவர்கள் தனது கண்டன உரையில், இந்திய நாட்டின் ‎அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் இந்த நாட்டிலுள்ள அனைத்து ‎சமய மக்களையும் கருத்தில் கொண்டுதான் சட்டங்களை இயற்றியுள்ளார்கள். ‎அவரவர் தங்களது மதச்சடங்குகளை செய்து கொள்வதற்கும், அனைத்து சமய ‎மக்களுக்கும் அவரவரது வழிபாட்டு உரிமைகளை முழுமையாக வழங்கும் ‎வகையிலும்தான் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.‎

அந்த அடிப்படையில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கென்று தனிச்சட்டங்களை ‎இந்த நாடு வழங்கியுள்ளது. அதுபோல இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும், ‎சீக்கியர்களுக்கும் என்று ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மத ‎சட்டதிட்டங்களுக்கு ஏற்ப சட்டங்களை வகுத்துத் தந்துள்ளனர். இந்தத் தனியார் ‎சட்டத்தின் அடிப்படையில்தான் ஒரு சீக்கியர் தனது கையில் குறுவாள் வைத்துக் ‎கொண்டு செல்லலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை எந்த ‎காவல்துறையும் தடுக்க முடியாது. அதே குறுவாளை ஒரு இந்துவோ, அல்லது ஒரு ‎முஸ்லிமோ கொண்டு செல்ல முடியாது. அதைப்போல கூட்டுக்குடும்பமாக ‎வாழக்கூடிய இந்துக் குடும்பங்களுக்கு வரி விலக்கு வழங்கும் சலுகையை ‎இந்துக்களுக்கு மட்டும் நமது அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது. ஒரு ‎முஸ்லிமோ அல்லது ஒரு கிறித்தவரோ இது போன்று கூட்டுக்குடும்பமாக இருந்து ‎கொண்டு வரி விலக்குக்கோர முடியாது. இப்படி இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், ‎இன்னபிற மதத்தினருக்கும் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தனித்தனி ‎சலுகைகளையும், உரிமைகளையும் இந்த அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது ‎போல முஸ்லிம்களுக்கும் சில உரிமைகளை இஸ்லாத்தின் வழிகாட்டுதல் ‎அடிப்படையில் இந்த அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது என்ற ‎அடிப்படையான விஷயம் இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியுமா? தெரியாதா?‎

இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் ஒன்றுக்கு ‎மேற்பட்ட திருமணங்களை முடித்துக் கொள்கின்றனர். சொத்துரிமை விஷயத்தில் ‎திருக்குர்-ஆன் காட்டும் வழிகாட்டுதல் அடிப்படையில் எங்களுக்கு சொத்துரிமை ‎வழங்கப்படுகின்றது. அதுபோல விவாகரத்து விஷயத்திலும் இஸ்லாமியர்கள் ‎தங்களது ஜமாஅத்துகளுக்குள் வைத்து நாங்கள் எங்களது விவாகரத்து முறைகளை ‎முடித்துக் கொள்கின்றோம். இதிலெல்லாம் எப்படி காவல்துறை தலையிட ‎அதிகாரமில்லையோ அதைப்போலத்தான் ஒரு பெண்ணுக்கு எத்தனை வயதில் ‎திருமணம் முடிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் இஸ்லாமிய மார்க்கம் ‎எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டுதல் அடிப்படையில் பருவமடைந்த ‎பெண் திருமணம் முடித்துக் கொள்ள எங்களது மார்க்கம் அனுமதி வழங்குவதை ‎இந்திய அரசியலமைப்புச் சட்டம் 251வது விதியில் முஸ்லிம்களுக்கு அனுமதி ‎வழங்கியுள்ளது. அந்த விதியின் அடிப்படையில்தான் ஒரு பெண் பருவமடைந்து ‎விட்டாலே இஸ்லாமியர்கள் 18வயது பூர்த்தியாகின்றதா? என்ற சட்டத்தையெல்லாம் ‎பார்க்காமல் எங்களுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள ‎உரிமையின் அடிப்படையில் திருமணம் செய்து வைக்கின்றோம். அதைத்தடுக்க ‎நீங்கள் யார்? இப்படி எங்களது ஷரீஅத் விஷயத்தில் தலையிட்டு அடாவடித்தனம் ‎செய்து முஸ்லிம்களை மிரட்டிப்பார்த்தால் நாடு தழுவிய போராட்டமாக இதை ‎மாற்றி மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும்.‎

இது குழந்தை திருமணம் என்று கூறி இந்தத் திருமணத்தை நிறுத்தியுள்ளீர்களே! ‎ஒரு பெண் பருவமடைந்துவிட்டால் அவளை குழந்தை என்று எவனாவது ‎கூறுவானா? இதிலிருந்தே உங்களது அறியாமை வெளிப்படுகின்றதா? இல்லையா?. ‎அவள் பருவமடைந்ததால் தானே குழந்தை பெற்றெடுக்கின்றாள். இதையெல்லாம் ‎நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?‎

உங்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும் தெரியவில்லை. உலக நடப்பும் ‎தெரியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதானே டெல்லி உயர்நீதி ‎மன்றம் முஸ்லிம் பெண்கள் 15 வயதிலேயே தான் விரும்பியவரை மணம் ‎முடிக்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. உங்களுக்கு ஒரு சட்டமும் ‎தெரியாதா?. தயவுசெய்து அதிகாரியாக பதவிக்கு வருபவர்கள் சட்டத்தைப் ‎படித்துவிட்டு பதவியேற்க வாருங்கள்” என்றும், இந்த அயோக்கியத்தனத்தைச் ‎செய்த பெரம்பலூர் மாவட்ட கலக்டர் தரேஸ் அஹமதுவை உடனடியாக பதவி ‎நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார். ‎முஸ்லிம்களை மிரட்டிய டி.எஸ்.பி சிவக்குமாரையும் தனது கணடன உரையில் ‎அவர் கண்டித்து தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.‎

இவரது உரை மழுமட்டையான அதிகாரிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் ‎என்றால் என்ன என்பது குறித்து பாடம் நடத்தியதைப் போல அமைந்தது.‎
போராட்டத்தின் ஹைலைட் :‎

இறுதியாக கண்டன உரை முடிந்தவுடன் வந்திருந்த மக்கள் அனைவரையும் ‎கைது செய்வார்கள் என்று நாம் நினைத்தால் காவல்துறையினர் நமது ‎நிர்வாகிகளிடத்தில் வந்து, “தயவுசெய்து அனைவரும் கலைந்து சென்று விடுங்கள்” ‎என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதுதான் போராட்டத்தின் ஹைலைட்.‎

இந்தப் போராட்டம் நடத்த அனுமதி வழங்காமல், காவல்துறை இதற்கு ‎தடைபோட்டபோதும், தடைகளைத் தகர்த்தெறிந்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்தப் ‎போராட்டத்தை நடத்திய போதும், வந்திருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்தும், ‎போராட்டத்தின் நியாயத்தைப் பார்த்தும், நாம்தான் சட்டம் தெரியாமல் இப்படி ‎செய்துவிட்டோம் என்பதையும் உணர்ந்த காவல்துறை நமது சகோதர, ‎சகோதரிகளை கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டதோடு போராட்டம் ‎நிறைவுற்றது.‎

இனிமேலும் இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைத்து ‎அடாவடித்தனம் செய்யும் இந்த அத்துமீறல் வேறு ஏதாவது பகுதியில் நடப்பதாகத் ‎தெரிந்தால் தமிழகத்தையே புரட்டிப்போடும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி ‎இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கும் நிலையை இங்கு ஏற்படுத்திவிட ‎வேண்டாம் என்று எச்சரித்ததோடு, இந்த போரட்டமானது ஒரு யுரேஷா ‎பானுவுக்காக நடத்தப்பட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ‎ஒட்டுமொத்த சமுதாய மக்களுக்காகவும் அவர்களது மத சுதந்திரத்தை உறுதி ‎செய்வதற்காகவும், அவர்களது மத உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் ‎நடத்தப்பட்ட போராட்டம் என்றும் நமது நிர்வாகிகள் உளவுத்துறை மற்றும் ‎காவல்துறை அதிகாரிகளிடத்தில் கூறினர்.‎

பெரம்பலூரில் இதுவரைக்கும் அதிகாரவர்க்கத்தை கண்டித்து இவ்வளவு ‎துணிச்சலாக இதுவரை யாரும் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியதில்லை ‎என்பதால் மிகப்பெரும் பரபரப்பு நிலவியது. அந்த அளவிற்கு பரபரப்பை ‎ஏற்படுத்திய இந்த போராட்டத்தை மறுநாள் மிக முக்கியத்துவப்படுத்தி அனைத்து ‎நாளிதழ்களும் செய்தி வெளியிட்டிருந்தன. குறிப்பாக நமது செய்திகளை ‎முற்றிலுமாக புறக்கணிக்கும் தினத்தந்தி கலர் பக்கத்தில் செய்தி ‎வெளியிட்டிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.‎

No comments:

Post a Comment