.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Thursday, October 11, 2012

தினமணியின் திமிர் வாதம்!


தினமணி நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் விதமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி தவறு.. தவறு.. தவறு.. என்ற தலைப்பில்  ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி படம் எடுத்தவர்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தனது தலையங்கத்தை எழுதி தான் ஒரு சங்பரிவார ஏஜெண்டு என்பதையும், அமெரிக்காவின் அடிவருடி என்பதையும் நிரூபித்துள்ளது தினமணி நாளிதழ்.


நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த அயோக்கிய யூதனுக்கும்,அடாவடி பாதிரியாருக்கும் அதற்கு துணை போகும் அயோக்கிய அமெரிக்காவுக்கும் எதிராக உலக முஸ்லிம்கள் கொந்தளித்துப்போய், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் தொலைந்து போகட்டும்,குறைந்த பட்சம் எதிர்ப்பு தெரிவிக்கலாமாவது இருக்கலாமல்லவா?

ஆனால் சங்பரிவார ஏஜெண்டான தினமணிக்கு அவ்வாறு வாய்மூடி மௌனமாக இருக்க இயலவில்லை. உலக நாடுகளே பற்றியெரியும் இவ்வேளையில் இந்தியா மட்டும் ஏன் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்று இந்த அயோக்கிய தினமணி நினைக்கிறதா? என்று நமக்கு விளங்கவில்லை. அதனால்தான் இது தொடர்ந்து முஸ்லிம்களை புண்படுத்தும் விதமாகவும் இஸ்லாமி யர்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. 

இனி இந்த அயோக்கிய தினமணி எழுதியவை சரியானது தானா? என்பதை இப்போது அலசுவோம்.

கடந்த சில நாட்களாக சென்னை அண்ணா சாலையில் ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தங்களது மத உணர்வைப் புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், அமெரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை என்று முதல் கேள்வியை எழுப்பியுள்ளது இந்த அயோக்கிய தினமணி.

அமெரிக்காவுக்கு எதிராகச் சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை என்று கேள்வி கேட்கும் அயோக்கிய தினமணிpயே! இதற்கு முன்பு தமிழகத்தில் பல பிரச்சனைகளில் பலர் இது போன்று பல நாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்களே! அப்போதெல்லாம் இந்தக் கேள்வியைக் கேட்டாயா?

இலங்கையைக் கண்டித்து இங்கு போராட்டம் நடத்துபவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்பாயா? இதுவரை கேட்டாயா?

என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்று கேட்கிறாயே? கூறுகெட்ட முண்டமே! கூடங்குளத்தில் எல்லா பணிகளும் முடிந்து மின் உற்பத்தி துவங்க உள்ள நிலையில் மூளை வெந்து போய் அதை நிறுத்தச் சொல்லி அமெரிக்காவின் ஏஜெண்டுகள் இங்கு போராட்டம் நடத்துகின்றார்களே! இந்த போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்து விடப் போகிறார்கள்? என்று கேட்டாயா?

முஸ்லிம்கள் என்றால் மட்டுமென்ன உனக்கு கிள்ளுக்கீரையா?

இந்தப்போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரானதா? அந்தப் படத்தை தயாரித்த சாம் பாஸில் என்ற நபருக்கு எதிரானதா? இதுவரை எங்குமே வெளியாகாத திரைப்;படத்தை இணையதளத்தில் வெளியிட்ட யு ட்யூப்க்கு எதிரானதா? யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமிய சகோதரர்கள்? என்று ஒன்றுமே அறியாத பச்சைப் பாலகனை போல கேள்வியெழுப்பியுள்ளது இந்த தினமணி.

உலகமறிந்த ஒரு விஷயத்தை ஒன்றும் அறியாதது போல கேள்வியெழுப்பியதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகின்றது. தினமணியின் அயோக்கியத்தனம்.

படம் எடுத்தவன் ஒரு யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கன். அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பொறுப்பை ஏற்றவன் டெர்ரி ஜோன்ஸ் என்ற கிருஸ்தவ பாதிரியாரான ஒரு அயோக்கியன். ஆந்த படம் அமெரிக்காவின் ஆசியோடும் ஆதரவோடும்தான் யூடியூபில் இன்று வரை உள்ளது. 

ஒபாமாவும், ஹிலாரி கிளிண்டனும் இது அமெரிக்காவின் கருத்து சுதந்திரம். இதற்கு எதிராக நாங்கள் ஒன்றும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி இந்த அயோக்கியத்தனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதுவெல்லாம் தெரியாதது போல நடித்துக் கொண்டு, யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்? என்று கேள்வியெழுப்பி தனது சங்பரிவார புத்தியை வெளிக்காட்டியுள்ளது தினமணி.

யூடியூப்புக்கு எதிரானதா? இந்தப் போராட்டம் என்றும் இவன் கேள்வி எழுப்புகிறான். உலக மகா அயோக்கியத் தனத்தைச் செய்துவரும் யூடியூப்புக்கு எதிராக யுத்தம் தொடுக்கவும் முஸ்லிம்கள் களம் காண தயாராகி விட்டார்கள் என்பதை அயோக்கிய தினமணிpக்கு சொல்லிக் கொள்கின்றோம். 

இன்னோசென்ஸ் ஆப் முஸ்லிம் என்ற ஆட்சேபனைக்குரிய திரைப்படம் யூ ட்யூபில் தொடர்ந்து மின்னூட்டம் பெற்றுள்ளது. அதை யூ ட்யூபிலிருந்து அகற்ற வேண்டும் என்று எகிப்து மற்றும் லிபியா நாடுகள் கோரிக்கை விடுத்த போதும் அந்நிறுவனம் அதனை ஏற்கவில்லை. அந்தக் காட்சிக் கோப்புகள் எங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறாமல் இருக்கிறது என்பதுதான் அந்த இணையதள நிறுவனம் தெரிவித்த பதில் என்று யூட்யூபுக்கும் முட்டுக் கொடுக்கின்றான் இந்த அயோக்கியன்.

யூட்யூபின் கம்யூனிட்டி கைடு லைன் சொல்வது என்ன? னுழn'வ ஊசழளள வாந டுiநெ என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள 6வது விதி: வெறுக்கத்தக்கப் பேச்சு: ஒரு மதத்தை தாக்கி அல்லது அவமதிக்கும் பேச்சை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கண்ட விதியில் கூறப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்கள் கொந்தளித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் அளவிற்கு வெறுக்கத்தக்க பேச்சாக ஒரு மதத்தை அவமதித்து தாக்கி தயாரிக்கப் பட்டுள்ள அந்த வீடியோ மேற்கண்ட யூடியூபின் கம்யூனிட்டி கைடு லைன் விதிமுறைப்படி நீக்கப்பட வேண்டும்.

ஆனால் கூகுள், அது விதிமுறைக்கு உட்பட்டே இருக்கின்றது எனக் கூறி அதை நீக்க மறுப்பதோடு பலரையும் பார்க்கத் தூண்டும்படி யூடியூபின் முகப்புப் பகுதியிலேயே இன்று வரை வைத்துள்ளது. இவையெல்லாம் சங்பரிவார கண்ணாடி போட்டுள்ள அயோக்கிய தினமணிக்கு தெரியாமல் போனது ஏன்? இதை ஆதரிக்கக் காரணம் காவிக் கரைபடிந்த கேவல புத்தியல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்தப் படத்தை தயாரித்து கதை எழுதி இயக்கியதாகச் சொல்லப்படும் சாம்பாஸில் என்பவர் இதுவரை ஹாலிவுட்டில் படம் எடுத்தது இல்லை. அங்கே இப்படியொரு நபரே கிடையாது. இவர் அமெரிக்காவில் தான் இந்தப் படத்தை தயாரித்தார் என்பதற்கும் சான்றுகள் இல்லை. 

அவர் 50 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் தயாரித்த இந்தப் படத்துக்கு பத்து யூதர்கள் பணம் அளித்ததாகச் சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை என்று ஹாலிவுட் திரையுலகம் தெரிவித்து விட்டது என்று கூறி தனது கயமைத்தனத்தை வெளிப்படுத்துகின்றான் இந்த அயோக்கியன்.

நபிகளாரை கொச்சைப்படுத்தி படம் எடுத்த அயோக்கியன் சாம்பாஸில் என்பவன் இதுவரை ஹாலிவுட்டில் எந்த படமும் எடுத்ததில்லையாம். தினமணி என்ற அயோக்கியன் தான் வைக்கும் இந்த வாதத்தின் மூலம் என்ன கருத்தைச் சொல்ல வருகின்றான்?

படமே எடுக்காத ஒருவன் இப்போது கேடுகெட்ட படம் ஒன்றை எடுத்தால் அது சரி என்று சொல்ல வருகின்றானா? இதுவரை படமே எடுக்காத ஒருவன் தினமணி ஆசிரியனது மனைவியைப் பற்றி இதுபோன்ற படம் எடுத்து அதை யூடியூபில் போட்டு விட்டால் அப்போது இந்த வாதத்தை வைப்பானா? 

இந்த அயோக்கியன்?   அங்கே இப்படியொரு நபரே கிடையாது என்று கூறி அந்த அயோக்கியனுக்கு இந்த அயோக்கியன் ஒத்து ஊதுகிறான். அங்கே இப்படியொரு நபரே கிடையாது என்று இவன் சொல்கின்றான் என்றால் இவன்தான் அந்த அமெரிக்க அயோக்கியனது தமிழகத்து ஏஜெண்டாக இருப்பானோ என்ற சந்தேகம் நமக்கு எற்படுகின்றது. யாருமே படம் எடுக்காமல் இந்த படம் வானத்திலிருந்து தானாக குதித்து விட்டது என்று சொல்ல வருகிறானா என்பதும் நமக்கு புரியவில்லை.

இவர் அமெரிக்கவில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தார் என்பதற்கும் சான்றுகள் இல்லை என்று சொல்லி அதை நியாயப்படுத்துகின்றான் இந்த அயோக்கியன்.

அமெரிக்காவில் தயாரித்தால் தான் அது கேடுகெட்ட படமா? இந்தப் படத்தை எவன் எங்கு தயாரித்திருந்தால் என்ன? தயாரித்தது ஒரு அமெரிக்க அயோக்கியனா? இல்லையா? அதற்கு அயோக்கிய அமெரிக்கா ஆதரவு அளிக்கின்றதா? இல்லையா? என்பது தான் இந்த அயோக்கியனிடம் நாம் கேட்கும் கேள்வி. 

இந்தப் படத்தைத் தயாரிக்க அமெரிக்க அரசு எந்த வகையிலும் உதவியிருக்கவில்லை என்பதைப் பார்க்கும்போது அமெரிக்கத் தூதரக அலுவலகத்தைத தாக்குவதிலும்கூட நியாயம் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறி அமெரிக்க அடிவருடியாக ஆகியுள்ளான் இந்த அயோக்கியன்.

அமெரிக்காவிற்கும் இந்தப் படத்திற்கும் துளியளவும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இந்த அயோக்கியன் வைக்கும் முழு வாதத்தின் சாராம்சம். படம் எடுத்தவர்களைத் தண்டிக்க அமெரிக்கச் சட்டத்தில் இடமில்லை என்று கூறி இந்தப் படம் எடுத்தவனுக்கு ஆதரவளித்து இதை எடுத்தவன் ஒரு அமெரிக்கன்தான் என்று அமெரிக்க அரசாங்கமே தனது பிரதிநிதியின் மூலம் ஒப்புக் கொண்டுவிட்டபிறகு இந்தப் படத்திற்கும் அமெரிக்கா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பச்சைப் பொய்யை கூறுகின்றான் இந்த அயோக்கியன்.

இந்த விஷயத்தில் இ;ந்த மரமண்டைக்கு விளங்கும் விதத்தில் ஒரு கேள்வியைக் கேட்கின்றோம்.

 போலிஸ்காரான் முன்னிலையில் பத்து பேர் சேர்ந்து கொண்டு அநியாயமான முறையில் ஒருவனை கொலை செய்கின்றார்கள். அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த போலிஸ் எப்படி அந்தக் கொலைக்கு பொறுப்பாகும்? போலிஸ் என்ன அந்தக் கொலையை செய்தவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ததா? அந்தக் கொலை என்ன போலிஸ் ஸ்டேஷனிலா நடந்தது? என்று எந்த மூளை வரண்டவனாவது கேட்டால் அது எப்படி

கிறுக்குத்தனமாக இருக்குமோ அதுபோலத்தான் இ;ந்த மூளை வரண்டவனும் கேள்வி எழுப்பியுள்ளான்.

அயோக்கிய அமெரிக்க அரசாங்கம் இதைத் தடுக்கவில்லை. அந்தப் படம் எடுத்தவன் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இது எங்கள் கருத்து சுதந்திரம். இதில் நாங்கள் தலையிட்டு அதை தடுத்து நிறுத்த முடியாது என்று அதை நியாயப்படுத்துகிறான். அவன் அதை தடுத்து நிறுத்தாவிட்டால் அவன் தானே அந்தத் தவறுக்கு பொறுப்பாவான். இ;ந்த மூளை வெந்த தினமணிp என்ற அயோக்கியனுக்கு தெரியாமல் போய் விட்டது. அந்த அளவுக்கு அவன் அணிந்தள்ள  ஆர்.எஸ்.எஸ். கண்ணாடி அவனது கண்ணை மறைத்து விட்டது போலும்.

முஸ்லிம்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் படங்கள் ஆயிரம் வந்தால் கூட அதை முஸ்லிம்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் எங்கள் உயிரைவிட மேலாக நாங்கள் நேசிக்கும் எங்களது நபிகளாருக்கு இழிவு ஏற்படுத்தும் விதமாக ஒரு துரும்பை நகற்றிப் போட்டாலும் கூட உலக முஸ்லிம் சமுதாயம் சும்மா இருக்காது என்பதை இந்த அயோக்கியனுக்கு சொல்லிக் கொள்கின்றோம்.

கூடங்குளத்திற்காக போராட்டம் நடத்திய தேசத்துரோகிகள் விஷயத்தில் இதுபோல தலையங்கம் எழுதினாயா? மானங்கெட்டவனே!

பாரத் பந்த் நடத்தி பச்சிளம் குழந்தைகளுக்கு பால் கிடைக்காத நிலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகளை யெல்லாம் இநத நாட்டில் ஏற்பட்டது உனக்குத் தெரியாதா? அதைக் கண்டிக்க துப்பிருந்ததா அயோக்கியனே!

விநாயகரை கடலில் கரைக்கச் செல்கின்றோம் என்ற பெயரில் இதைவிட பெரும் பெரும் கேடுகளைச் செய்து நாட்டை சுடுகாடாக்கும் நிகழ்வுகள் வருடந்தோறும் நிகழ்ந்து வருகின்றனவே! அப்போதெல்லாம் வருடா வருடம் தலையங்கம் எழுதாமல் தூங்கிக் கொண்டிருந்தாயா? அயோக்கியனே!

பாபர் மசூதியை இடிப்பதற்காக சீலா பூஜை, கரசேவை என்று படை திரட்டிச் சென்ற சங்பரிவாரத் தீவிரவாதிகளால் லட்சம் மடங்கு இடையூறு ஏற்பட்டதே! அதைக் கண்டித்து இப்படி எழுதினாயா?

இஸ்லாமிய சமுதாயம் கொந்தளிப்பின் உச்சத்திற்குச் சென்று உணர்வுப்பூர்வமாக நடத்திய போராட்டங்கள் அனைத்தும் அவசியமற்றது என்று சொல்லும் அயோக்கிய தினமமணியே! நீ சொன்ன வார்த்தையையே உனக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கின்றோம்.

முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் உன் போன்ற அயோக்கியர்களை அடையாளம் காட்டாவிட்டால் நாடு சுடுகாடாகி விடும் என்பதால் தான் உன்னை அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

உன்னை அமைதியை விரும்பும் தமிழக மக்களிடமிருந்து அப்புறப்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கின்றோம்.  

No comments:

Post a Comment