.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Wednesday, October 31, 2012

* மழைகாலத்தில் ‘மின்சாரம்’ தாக்காமல் இருக்க என்ன செய்யனும்:

பருவமழை காலங்களில் மின்சாரம் தாக்காமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது.


மின்சார வாரியத்தின் அட்வைஸ்ட் டிப்ஸ் சில...
1- மின் விபத்துகளை தவிர்க்க மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற மின்சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்.
2- மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்து விட வேண்டும்.
3- குளிர்சாதனப்பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவது, ஈ.எல்.சி.பி. என்ற மின்கசிவு கருவியை மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்துவது, உடைந்த மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
4- மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கேபிள் டி.வி. வயர்களை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
5- எர்த் பைப் போடுவது, 5 ஆண்டுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை மாற்றுவது, மின்சார கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே கம்பி மீது துணி கயிறு கட்டுவது, கால்நடைகளை கட்டுவது, விளம்பர பலகை வைப்பது, மழைகாலங்களில் மின்சார கம்பங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
6- மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். அத்துடன் ஈரமான இடங்களில் சுவிட்சுகள் பொருத்துவது, மின் சர்க்யுட்டை அளவுக்கு மீறி பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
7- தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் விட்டு அணைக்காமல், தீயணைப்பான்களை பயன்படுத்துவது,
8- இடி, மின்னலின் போது வெட்ட வெளி, குடிசை, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழே தஞ்சம் புகாமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடையுங்கள்.
9- இடிமின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்ïட்டர் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

இதுதான் நம்ம மின்சார வாரியம் கொடுத்திருக்கும் டிப்ஸ்!

No comments:

Post a Comment